Nov 2, 2010

प्रवीण पूरक पाठों का तमिल अनुवाद

(सौजन्य राजभाषा विभाग एवं सी डेक)
Lessons supplementary 1


இன்று நம் நாட்டின் நுகர்வாளர் முன்னைவிட அதிக விழிப்படைந்தவராகியுள்ளார்.

பாரத அரசும் நுகர்வோர்களின் உரிமைகள் பாதுகாப்புக்கு முதன்மை தந்து 1986-இல் நுகர்வோர் பாதுகாப்புச் சட்…….


………

இந்த அமைச்சகத்தின் கீழ் விலைக்கட்டுப்பாடு, அத்தியவாசிய பொருள்கள் கிடைத்தல், நிறுவை-அளத்தல் கட்டுப்பாடு மற்றும் நுகர் பொருள்களின் தரக்கட்டுப்பாடு போன்ற செயல்கள் பற்றிய கொள்கைகள் நிர்ணயிக்கப்படுகின்றன.

நுகர்வோர்களை அன்றாடம் நடக்கும் ஏமாற்று வேலைகளிலிருந்து காப்பாற்றுவதற்காக, அவர்களுக்கு உற்பத்திப் பொருள்களின் தரம், அளவு,கிடைக்கும் தன்மை, மற்றும் தரமான பொருள்களின் விலை பற்றிய தகவல்கள் பெறும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

இதோடுகூட நுகர்வோருக்கு அளிக்கப்படும் பொறுப்புறுதியின்படி அவர்களுக்கு அந்தப் பொருளை ஒரு குறிப்பிட்ட காலவரையறையில் இலவசமாகப் பழுது பார்க்க செய்ய அல்லது குறைபாடுள்ள பொருளை மாற்றுவதற்காக உரிமை வழங்கப்பட்டுள்ளது.

இன்று அங்காடியில் தரப்படும் விருப்பேற்புகளின் படி நுகர்வோர் தனக்கு விருப்பான உற்பத்திப் பொருளை போட்டியின்படி குறைந்த விலையில் பெற்றுக் கொள்லலாம்.

நுகர்வோர்களின் மீது சுரண்டலைத் தடுக்கவும் அவர்களின் குறையீடுகளுக்குத் தீர்வு காணவும் வேண்டி,நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அரசு மாவட்ட அளவில் நுகர்வோர் நீதிமன்றங்களை நிறுவியுள்ளது.

நுகர்வோருடன் எவ்விதமான மோசடி பற்றிய குறையீடுகள் அல்லது அதிகாரம் ஒப்படைக்கப்பட்ட சேவைகளில் எவ்வித குறைப்பாடு அல்லது தொய்வு பற்றிய முறையீடுகளை நுகர்வோர் நீதிமன்றத்தில் பதிவு செய்யலாம்.

இன்்று நுகர்வோர் பாதுகாப்பு பற்றிய எல்லை மிகவும் பரந்துள்ளது.

அரசு அளிக்கும் பொதுச்சேவைகளை சாலைப் பராமரிப்பு, அவற்றில் போதிய வெளிச்சத்துக்கான ஏற்பாடு, சுத்தமான நீர் மற்றும் சுகாதாரமான சூழலுக்கான வழிவகை, ஆரம்பக்கல்வி மற்றும் சிகிச்சை வசதிகள்,போக்குவரத்து போன்ற ஏற்பாடுகளில் ஒழுங்கீனம் பற்றியும் மக்கள் நுகர்வோர் நீதிமன்றத்தின் உதவியைக் கோரலாம்.

வங்கிகள்,மருத்துவமனைகள்்,மருத்துவர்கள்,வீட்டுவசதி வாரியங்கள் மற்றும் தனியார் கட்டிட நிர்மாணம் செய்பவர்கள் ஆகியோர் அளிக்கும் சேவைகளும் இதன் பார்வையில் சேர்க்கப்பட்டுள்ளன.

நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு முழுமையான சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நீதிமன்றங்கள் மூலமாக பல வழக்குகளுக்கு நியாயப்படியான முறையில் தீர்வு அளிக்கப்படுகிறது,அத்துடன் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நீதிமன்றச் செலவுடன் உளப்பாங்கிலும்,உடலளவிலும்,பொருள் ரீதியாகவும் அவருக்கு ஏற்பட்ட இழப்பீட்டுக்குப் பதிலாக உசிதமான தொகை அளிக்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Lessons supplementary 2

தகவல் தொடர்பு தொறையின் கடந்த காலத்தைப் பற்றி நினைவு கூர்வோமானால், இன்று இந்தத்துறையில் மிகுந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது அறியலாம்.

நாகரீக வளர்ச்சியுடன் மனிதன் தொலைத்தொடர்புக்காக அஞ்சல் முறையை வளரச் செய்தான்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மின்னணுவியல் என்ற புதிய அறிவியல் வளரத் தொடங்கியது.

ரேடியோ,சினிமா மற்றும் தொலைக்காட்சி இதன் முக்கியமான கொடைகள்.

தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் தொலைக்காட்சியை உலகின் எல்லா பகுதிகளிலும் சென்றடைய செய்துள்ளன.

இந்திய ஆப்பிள் செயற்கைக்கோளுக்குப் பிறகு இன்ஸாட் தொடரில் பல செயற்கைக்கோள்களை அமைத்துள்ளது.

தகவல் தொடர்பும் புரட்சியில் கணினியும் முக்கியமான பங்காற்றியுள்ளது.

இருபத்தோறாம் நூற்றாண்டு புதிய மற்றும் மிக நவீன தகவல் தொடர்பு பாடங்களின் தாயாக மலர்ந்துள்ளது.

நம் நாடு ஒரு ஜனநாயக குடியரசு.

இது காரணமாகவே மக்கள் கருத்துக்கணிப்பு ஊடகங்களின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இன்று வணிகத்தொடர்புகள்,இரயில்,விமானம் மற்றும் ஓட்டல் பதிவு செய்தல் மற்றும் வங்கிகளில் நாளய மாற்றங்கள் ஆகியவற்றுக்கு கணினி முகவும் உதவிகரமாக உள்ளது.

இப்போது தகவல்களை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு மின்னஞ்சல்,தொலைநகல்,கணினி மேலாண்மை முதலியன மூலம் வெகுவேகமாக அனுப்பமுடியும்.

உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான வலைப்பின்னல்களை ஒன்றுக்கொன்று இணைக்கும் இணையம் என்று பெயருள்ள உலகளாவிய அமைப்பு முறையும் நடைமுறைக்கு வந்துள்ளது.

இது உலகின் தகவல் தொடர்பு முறைகளை ஒரே சரட்டில் கோத்துள்ளது.

உலகளாவிய படங்களுடன் கூடிய கைப்பேசித் தகவல் தொடர்புச்சேவை இருப்பதால்,எந்தஓர் இடத்திலிருந்தும் ஏதோ வேறோர் இடத்தில் இருக்கும் நபருடன் நேரடித் தொடர்பை நீங்கள் ஏற்படுத்திக்கொள்ளமுடியும்.

இணையத்தின் கீழ்தான் உலகளாவிய அலை(www)ஏராளமான தகவல்களைப் பெறுவதற்கு ஒரு சாதனம் ஆகும்.

மின் வாணிகம் வாயிலாக நிறுவனங்களும்,விற்பனையாளர்களும்,வியாபாரிகளும் நுகர்வோரும் பெரிதும் பயனடைந்துள்ளனர்.

மின்காசு வாயிலாக ரொக்கம் தராமலே பொருள்களை வாங்க இயலும்.

சிகிச்சைத் துறையில் தொலை மருத்துவ வசதி வாயிலாக டாக்டர் தொலைவில் அமர்ந்தே நோயாளிகளுக்கு வெற்றிகரமாகச் சிகிச்சையளிக்க முடியும்.

இதனால் நேரமும் பணமும் வெகுவாக மிச்சப்படுகிறது.

தொலைத் தோன்றகை வாயிலாக நேற்றுவரை உங்களால் செல்லமுடியாத இடத்திற்கும் நீங்கள் செல்லமுடியும்.

இதுதவிர மின்-துணி,மின்-ஆலோசனை,மின்-நிர்வாகம் போன்ற பொதுமக்கள் பயன்பாட்டுச் சேழைகளாலும் நீங்கள் நன்மையடைய இயலும்.

இன்று உலகின் உயர்மட்டக் கல்வி பற்றிய தகவலை இமையத்துடன் கணினிவாயிலாய் வீட்டிலேயே பெறலாம்.

இதற்கு பள்ளி அல்லது கல்லூரி செல்லவேண்டிய தேவையில்லை.

இப்போது மின்னணுப் புத்தங்களின் காலமும் வந்துவிட்டது.

தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை வாய்ப்புக்கான பல சாத்தியக் கூறுகள் உள்ளன.

எனவே தகவல் தொடர்பு ஊடகங்களில் தொடர்ந்து நடைபெறும் முன்னேற்றம் நாட்டின் வளர்ச்சியில் திருப்புமுனையாக அமையும்,நாளும் புதிதாக வளர்ந்துவரும் செய்தித்தொடர்பு ஊடங்களுக்கு ஏற்பத்தனை மாற்றிக்கொள்ளாத நாடு வளர்ச்சியின் ஓட்டப்பந்தயத்தில் பின் தங்கிவிடும்.

Lesson Supplementary 3

சுகாதாரம் நமது உண்மையான செல்வம்.

உடல்நலமுள்ள மனிதன் தாந் மகிழ்ச்சியான வாழ்க்கையை நுகர முடியும்.

உடல்நலத்துடன் இருத்தல் என்பதன் பொருள் நோயிலிருந்து விடுதலை என்பது மட்டுமல்ல,நோயற்ற உடலுடன் நலமிருந்த மனமும் இருப்பதாகும்.

நம் உடலின் வெவ்வேறு உறுப்புகள் பல்வேறு செயல்களைப் புரிகின்றன, உதாரணமாக-மூச்சுவிடுதல்,செரிமானம்,குருதியோட்டம் மற்றும் கழிவுப் பொருள் வெளியேற்றம்.

உடலின் ஒவ்வொரு உறுப்பும் சரிவர பணியாற்றும் போது தான் முழு உடலும் எளிதாகச் செயலாற்றுகிறது.

உடலின் ஏதேனும் உறுப்பு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்பு முறை பாதிக்கப்படும் போது நாம் நோய்வாய்ப்படுகிறோம்.

நோயின் முக்கியமான காரணங்கள், சமச்சீரற்ற உணவுகளை அருந்துதல், மாசுள்ள தண்ணீர் மற்றும் உணவுப்பொருள்களைச் சாப்பிடுதல் மற்றும் அசுத்தமான காற்றில் மூச்சுவிடுதல் இவையாகும்.

உடலில் நோய்க்கிருமிகள் புகும் போது அல்லது தவறான உணவுப் பழக்கங்களால் கூட நாம் நோய்வாய்ப்படுகிறோம்.

ஊட்டமின்மையாலும்,கூடுதல் சத்துள்ள பொருள்களை உண்பதாலும் கூட நோய்கள் ஏற்படுகின்றன.

மனதின் பதற்ற நிலையும் பல நோய்களுக்குக் காரணமாகும்.நோய்களைத் தடுப்பதற்கு முக்கியமான முறை சுற்றுச்சூழலைச் சுத்தமாகவும் ஆரோக்யமாகவும் வைத்திருப்பதாகவும்.

நாம் சொந்த உடல்நலத்திலும் சமூக சுகாதாரத்திலும் முழு கவனம் செலுத்தவேண்டும்.

நோயைத்தடுக்க நோயின் காரணங்களுக்கே முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

சுத்தம் நோய்கள் பரவுவதைத் தடுக்கிறது.

நம் சொந்த உடல்நலத்திற்கு நாம் உடல்சுத்தம்,சமத்தீரான உணவு,உறக்கம் மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்தவேண்டும்.

புகைபிடித்தல்,மது அருந்தல் மிக அதிகமாக உண்ணல் மற்றும் போதைப்பொருள்கள் பயன்படுத்தல் இவற்றிலிருந்து விலகவேண்டும்.

நகங்களைச்சீராக வெட்டிச்சுத்தமாக வைத்துக்கொள்ளல்,கண்களை குளிர்ந்த நீரால் கழுவுதல், ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும் வாயைக் கொப்பளித்தல்,முறையாகக் குளித்தல்,தினமும் துவைத்த துணிகளை அலசுதல்,உணவு வகைகளின் சுத்தத்திற்கு கழுவிய பாத்திரங்களைப் பயன்படுத்தல், உணவு வகைகளை மூடிவைத்தல், பச்சைக்காய்கறிகளையும் பழங்களையும் கழுவிய பிறகு உண்ணல்,உணவு சமைக்கும் போதும் பரிமாறும் போதும் சுத்தம் பற்றி சிறப்பான அக்கறை எடுத்துக்கொள்ளல்,பற்கள்,தலைமுடி போன்றவற்றை முறைப்படி சுத்தமாக வைத்துக்கொள்ளல் முதலியவை உங்கள் சொந்தச் சுத்ததிற்கு மிகவும் அவசியமானவை.

சமூக உடல்நலம் என்றால் சமூகத்தின் அநைத்து உறுப்பினர்களின் உடல்நலம் பற்றி கவனிப்பதாகும்.

நகரங்களின் மக்கள் தொகைப்பெருக்கம்,தொழில் மயமாக்குதல் முதலியன நம் சுற்றுச்சூழலை மாசுப்படுத்துகின்றன.

நகரின் ஒவ்வொரு பகுதியையும் சுத்தமாக வைத்திருப்பது உள்ளூர் நகராட்சி மன்றத்தின் தலையாய பொறுப்பு.

சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பது நமது கூட்டான பொறுப்பாகும்.மாசுப்பட்ட மீரினால் உண்டாகும் நோய்களைத் தடுக்கும் பொருட்டு சமூக உடல்நலம் காக்க சுத்தமான தண்ணீர் வழங்குதல் போன்ற பல பொறுப்புகள் நகராட்சி மன்றத்துக்கு உண்டு.

இதுதவிர நகராட்சி மன்றம் ஆலைகளிலிருந்து வரும் அசுத்தநீர் மற்றும் பிற கழிவுப்பொருள்களை அகற்றும் பணியையும் செய்கிறது.

ஆலைகளிலிருந்தும் தொழிற் ஒன்றியங்களிலிருந்தும் வரும் கழிவுப்பொருள்களை வெளியேற்றப் பல்வேறு விஞ்ஞான முறையிலான உத்திகளைக் கடைபிடிப்பது சுகாதார வாழ்வுக்கு உதவிகரமாயிருக்கும்.

Lesson Supplementary 4

முன்பு மகளிர் அரசியல்,அறிவியல்,கல்வி மற்றும் பிற துறைகளில் ஆண்களை விட மிகவும் பின்தங்கி இருந்தனர்.

சமூகமும் குடும்பமும் அவர்களை வெளியே போக அனுமதி அளிக்கவில்லை

நவீன யுகத்தில் பெண்கள் தங்களுடைய தளைகளை உடைத்துவிட்டார்கள்.

இன்றைய நவீன மகளிர் ஆடவர்களுடன் ஒவ்வொரு வறையிலும் தோலோடு தோள் சேர்த்து முன்னேறுகிறார்கள்.

கல்வி பரவியதுடன் இந்திய மகளிர் இலக்கியம் அறிவியல்,சிகிச்சை மற்றும் விளையாட்டு இயல்களில் தங்கள் தநி அடையாளத்தைப் பதித்துள்ளனர்.

இன்று வீட்டினுள் ஆடும் விளையாட்டுகளிலிருந்து பெண்கள் வெளியே வந்துள்ளனர்.

அவர்கள் விளையாட்டு உலகில் ஆண்களின் ஆதிக்கத்துக்கு அறைகூவல் விடுத்துள்ளனர்.

…….

…….

ஆசிய விளையாட்டுகளில்் அஞ்ஜு பாபி ஜார்ஜ் நீளத்தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்றார்.

ஒலிம்பிக் விளையாட்டுகளிலும் அவர் ஆறாவது இடத்தைப் பெற்று இந்தியாவைப் பெருமைப்படுத்தியுள்ளார்.

இன்று இந்திய மகளிர் ஹாக்கி மற்றும் கிரிக்கெட் விளையாட்டுகளிலும் நன்றாக ஆடி உலகஅளவில் இந்தியாவை முன்வரிசைக்கு கொணர்ந்து நிறுத்தியுள்ளனர்.

கிரிக்கெட்டில் சாந்தா ரங்கஸ்வாமி, அஞ்ஜும் சோப்ரா,ஸந்தியா அகர்வால் மற்றும் ஹாக்கியில் ஸூரஜ்லதா தேவி, பரம்ஜீத் கௌர் முதலியோர் நன்றாக விளையாடி இந்தியாவின் பெயரை விளங்கச் செய்துள்ளனர்.

பேட்மிண்டனில் அபர்ணா போபட், நீச்சலில் புலா சௌதரி, மலை ஏறுதலில் பச்செந்திரி பால், குறிபார்த்து சுடுதலில் அஞ்சலி வேத்பாடக் முதலியோர் விஞ்ஞான முறையில் திறமை காட்டி இந்தியாவின் பெருமையை மேம்படுத்தியுள்ளனர்.

டென்னிஸ் விளையாட்டில் ஸானியா மிர்ஸா உலக மக்கள் உள்ளங்களில் தன்னுடைய முத்திரையைப் பதித்திருக்கிறாள்.

விளையாட்டு உலகில் மகளிர் அடி எடுத்து வைதத்தால் புதிய சாதனைகள் படைக்கப்பட்டிருக்கின்றன.

No comments:

Post a Comment