(सौजन्य राजभाषा विभाग एवं सी डेक )
Lesson 1
இம்முறை நாங்கள் விடுமுறைப் பயணச் சலுகை எடுத்து, இந்தியாவின் கிழக்கிலுள்ள ஒரிசா செல்ல திட்டமிட்டோம்.
ஒரிசா எங்களை எப்போதும் கவர்ந்து வருகிறது.
கடவுள் மீது ஆழ்ந்த பக்தி காரணமாக ஜகந்நாத புரியை தரிசனம் செய்வது எனக்கும் என் மனைவிக்கும் விருப்பமாக இருந்தது.
அதோடு கூட அசோகப் பேரரசரின் கலிங்க வெற்றியின் போர்க்களத்தையும் மற்ற வரலாற்றுச் சிறப்பு வாந்த இடங்களையும் பார்க்க விரும்பினேன்.
நாங்கள் ரயில்வண்டியில் ஒரிசாவின் தலைநகர் புவனேஸ்வரை அடைந்தோம்.
அங்கிருந்து நாங்கள் பேருந்து முலமாக பகவான் ஜகந்நாதரின் நகரமான புரிக்குச் சென்றோம்.
புவனேஸ்வரிலிருந்து புரிவரை தொலைவு சுமார் 52 கிலோ மீட்டர்.
மதநம்பிக்கையின்படி, பிரசித்தி வாய்ந்த நான்கு தலங்களில் புரி ஒன்றாகும்.
புரியில் பகவான் கிருஷ்ணர், பலபத்திரர்(பலராமர்) சுபத்திரை இவர்களின் மரத்தாலான உருவச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
எல்லா வருடமும் இந்த உருவச்சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதை பகவான் ஜகந்நாதரின் ரதயாத்திரை என்கிறார்கள்.
இதில் லட்சகணக்கான பக்தர்கள் சிரத்தையுடன் பகவான் கிருஷ்ணர் , பலபுத்திரர் மற்றும் சுபத்திறையின் தேர்களை இழுத்தவாறு குண்டிசா கோவில் வரைக் கொண்டு செல்கிறார்கள்.
புரியிலுள்ள ஜகந்நாதர் கோவில் தொன்மையும் பொலிவும் வாய்ந்தது.
புரியில் இந்த கோவில் தவிர சிறியதும், பெரியதுமாக அநேகக் கொவில்கள் உள்ளன.
அதனால் இது கோவில்களின் என்று அழைக்கப்படுகிறது.
புரி சமயச் சிறப்பு வாய்ந்த நகரம் மட்டுமல்ல, கடற்கரை காரணமாகவும் கிழக்கு மண்டலத்தின் பிரதான சுற்றுத்தலமாக பிரசித்தி பெற்றது.
உள்நாடு வெளிநாடுகளிலிருந்து லட்சக்கணக்கான பயணிகள் இங்குள்ள கடற்கரையில் உல்லாச பயணத்துக்கும், சூரியோதத்தின் ஆனந்தத்தை அனுப்பவிக்கும் வருகிறார்கள்.
கடலிலிருந்து மெல்ல மெல்ல எழும்பும் சூரியக்கோணத்தைக் கண்டு எங்களுக்கு அற்புதமான, மயிர்க் கூச்செறிகிற உணர்வு ஏற்பட்டது.
குழந்தைகளுடன் கடலில் குளிக்கவும் செய்தோம்.
அலைகளுடன் விளையாடுவதில் குழந்தைகளுக்கு மிகுந்த மகிழச்சி ஏற்பட்டது.
கடற்கரையிலேயே சங்கு, சிப்பிகளால் செய்த அழகழகான பொருள்கள் விற்பவர்கள் சுற்றிக் கொண்டிருந்தனர்.
நாங்கள் அவர்களிடமிருந்து சிலப் பொருள்கள் வாங்கினோம், பிறகு திரும்பினோம்.
ஒரிசா மாநிலத்தின் அரசு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா பயணிகளுக்காக வழிநடத்து பயண ஏற்பாடு செய்கிறது.
இரண்டு நாள் புரியில் தங்கிவிட்டு நாங்கள் அரசு சுற்றுலா கழகத்தின் பேருந்தில் ஒரிசாவின் முக்கியமான சுற்றுலா மையங்களைக் காண திட்டமிட்டொம்.
ஓட்டலின் அருகிலேயே சுற்றுலா பேருந்து நின்றிருந்தது, நாங்கள் உட்கார்ந்ததுமே பேருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டது.
பேருந்தின் முதல் நிறுத்தம் சந்திரபாகா ஆறு கடலில் சங்கமிக்கும் இடம்.
ஆற்றில் அநேகமாகத் தண்ணீரே இல்லை.
மழைக்காலத்தில் இதில் தண்ணீர் வரும்போது, ஆறு இரு கரைகளையும் உடைத்துக் கொண்டு.
வேகமாகக் கடலில் கலக்கத் துடிக்கிறது.
அதன்பின் நாங்கள் கோனார்க்கை அடைந்தோம்.
கோனார்க் தனது அருமையான சிற்பக்கலை காரணமாக உலகப்பிரசித்தி வாய்ந்தது.
கோனார்க்கிலுள்ள சூரியன் கோவில் நமது பண்பாட்டின் விலைமதிப்பற்ற பொக்கிஷமாகும்.
கோனார்க்குப் பின் எங்கள் அடுத்த பயண இடம் கலிங்க போர்க்களம்.
இந்தக் களத்தின் தான் பேரரசர் அசோகர் கலிங்கத்தை வெற்றிக் கொள்ள போர் புரிந்தார்.
இங்கு தான், அவர் போர் செய்வதில்லை என்று உறுதி பூண்டு பௌத்த சமயத்தை ஏற்றுக் கொண்டார்.
மதியம் நெருங்கலாயிற்று. சூரியன் ஏன் வெப்பத்தினால் எங்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தார்.
இப்போது நாங்கள் புவனேஸ்வருக்கு திரும்பி வந்தோம்.
புவனேஸ்வரில் பிரசித்தி வாய்ந்த பழமையான லிங்கராஜ்கோவில்லைப் பார்த்தோம்.
இது 108 கோவில்கள் உள்ள வளாகம்.
இந்தக் கோவில் நம்முடைய கட்டிட நிர்மாணக் கலைக்கும், மதநம்பிக்கைக்கும் எடுத்துக் காட்டாகும்.
புவனேஸ்வர நகரப் பயணத்தை நாங்கள் பேருந்து வாயிலாகவே செய்தோம்.
பிற்பகலில் நாங்கள் பெயர் பெற்ற நந்தன் கானன் வனவிலங்குகள் பாதுகாப்பு மையத்தைப் பார்த்தோம்.
வெண்புலியும், யானையும் நந்தன் கானனின் முக்கியமான கவர்ச்சிகளாகும்.
வனவிலங்குகள் திறந்த வெளியில் சுற்றித் திரிவதைக் காண்பது தனியான உவகை மிகுந்த அனுபவம்.
நந்தன் கானன் சுற்றுலாவிற்குப் பிறகு நாங்கள் உதயகிரி மற்றும் கண்டகிரிகியின் உலகப் பிரசித்தி வாய்ந்த ஜெயினக் குகைகளைக் கண்டோம்.
மறுநாள் நாங்கள் பிரசித்தி பெற்ற சில்கா ஏரியை பார்க்க திட்டமிட்டோம்.
'சில்கா' இந்தியாவின் மிகப் பரந்த ஏரி, இங்கே உலகப் பிரசித்தி வாய்ந்த பறவைகள் சரணாலயமும் உள்ளது.
இது ஆசியாவிலேயே மிகப்பெரிய உப்புநீர் ஏரி.
நாங்கள் பகல் முழுதும் சில்காவில் படகு சவாரி செய்தோம்.
இதில் டால்ஃபின்களைக் கண்டு குழந்தைகள் மிகவும் களிப்படைந்தனர்.
இந்த ஒரிசாப் பயணம் எங்களுக்கு எப்பவும் நினைவில் இருக்கும்.
Lesson 2
சமஸ்கிருதத்தில் ஒரு புகழ் வாய்ந்த நாடகம் 'மிருச்சகடிகம்' அதாவது 'மண்வண்டி'
இந்த நாடகத்தை சூத்ரகன் எழுதினார்.
இந்த நாடகத்தில் சமூகத்தின் நல்ல கூறுகளையும் கெட்ட கூறுகளையும் நேர்த்தியாக காட்டப்பட்டுள்ளது, அதனால் அவை இன்றும் கூட நம்பத் தகுந்தவைகளாகத் தெரிகின்றன.
நாடகத்தின் தலைவன் சாருதத்தன். அவன் செல்வந்தக் குடும்பத்தைச் சார்ந்தவன்.
அவன் செல்வந்தர்களின் பேட்டையில் வசிக்கிறான், ஆனால் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் வறுமையில் வாழ்கிறான்.
செல்வம் என்ற பெயரில் அவனிடம் நல்லொழுக்கமும் புகழும் மட்டுமே தங்கியுள்ளது.
வசந்தசேனை என்ற வேசி அவனை மிகவும் நேசிக்கிறாள்.
அவளுக்கு சாருதத்தனிடம் அன்பு, பணத்திடம் அல்ல.
அக்காலத்தில் சமூகத்தில் அநியாயமும் அக்கிரமும் பெருகியிருந்தன.
அரசனுக்கு இது குறித்து எந்த கவலையும் இல்லை.
அவன் மகிழ்ச்சி களியாட்டத்தில் இருந்து வந்தான்.
அவனுடைய அரசாட்சியில் திருடர்களும் கொள்ளையர்களும் தங்கள் விருப்பப்படிகொள்ளையடித்து வந்தனர்.
மக்கள் இவர்களிடம் பீதியுற்று இருந்தனர்.
சமூகத்தில் பாதுகாப்பின்மை பரவியிருந்தது.
இதே பயத்தினால் வசந்தசேனை தன்னுடைய நகைகளை சாருதத்தனிடம் பாதுகாப்பாக வைத்திருந்தாள்.
ஒரு நாள் ஒரு திருடன் அவற்றை திருடிக் கொண்டு போய்விட்டான்.
வசந்தசேனை பாதுகாக்கத் தந்த பொருளை தான் கவர்ந்துவிட்டதாக மக்கள் குற்றம் சாட்டுவார்களோ என்ற கவலை சாருதத்தனைப் பீடித்தது.
சாருதத்தனை இந்த அவமானத்திலிருந்து காப்பாற்ற, அவனுடைய மனைவி த்யூதா தன்னுடைய விலை மதிப்பற்ற கழுத்து சங்கிலியை வசந்தசேனையிடம் அனுப்பினாள்.
இதற்கிடையில் களவுபோன நகைகள் வசந்தசேனையிடம் வந்துவிட்டன.
வசந்தசேனை த்யூதாவிடம் சங்கிலியைத் திருப்பிக்கொடுக்க வேண்டி சாருதத்தனின் வீட்டுக்கு வருகிறாள்.
சாருதத்தனின் சிறிய குழந்தை, தனக்கு தங்கத்தாலான வம்டி வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறது.
உண்மையில் அவனுடைய தோழர்கள் செல்வந்தக் குடும்பத்தினர், விலையுயர்ந்த பொம்மைகளுடன் விளையாடினர்.
சாருதத்தனின் மகனை, மண்ணாலான வண்டியைக் கொண்டு ஏமாற்றவது அவர்களின் இயலாமையாக இருந்தது.
வசந்தசேனை இதைக்கண்டு வருத்தமடைகிறாள், குழந்தையின் வண்டியை தன் நகைகளால் நிரப்புகிறாள்.
திரும்பும் போது கூட்டத்தில் தேர் மாறி விடுவதால் வசந்தசேனை ஆளரவமற்ற இடத்தை அடைகிறாள்.
அரசனின் மைத்துனன் சங்கருக்கு சாருதத்தனிடம் பொறாமை, ஏனெனில் வசந்தசேனை சாருதத்தனின் காதலி, அவனும் அவளை விரும்புகிறாள்.
சாருதத்தனுக்கு எதிராக பொய் சாட்சியம் கூறப்படுகிறது.
அதனால் சந்தர்ப்பம் கிடைத்ததும் சங்கர் வசந்தசேனையைக் கொலை செய்ய முயல்கிறான்.திரும்பி, சாருதத்தன் மீது வசந்தசேனையைக் கொலை செய்ததாக பொய்க் குற்றம் சாட்டுகிறான்.
நீதிபதியிடம் வழக்கு சென்றடைகிறது.
நீதிமன்றகளிலும் ஊழல் பரவியுள்ளது.
அரசனின் மைத்துனன் நீதிபதியை மிரட்டுகிறான்.
No comments:
Post a Comment