Dec 1, 2010

प्राज्ञ पाठमाला पाठ 1 का तमिल अनुवाद

(सौजन्य राजभाषा विभाग एवं सीडेक)
Lesson 1


இந்தியா தன்னாட்சி உரிமைபெற்ற ஜனநாயக்குடியரசு.

நம்முடைய அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் கூட்டாட்சிமுறைக் கருதுகோளைக் கொண்டிருந்தார்கள்.

இந்திய யூனியனின் யாவரினும் உயர் தலைவர் ஜனாதிபதி. அவரது உதவிக்காக துணை ஜனாதிபதி உள்ளார்.

ஆட்சி அமைப்புக்கு மூன்று முக்கிய உறுப்புகள் உண்டு - சட்டவியல்துறை, நிர்வாகவியல் துறை மற்றும் நீதியியல்துறை.

மக்களாட்சி அமைப்பில் முழுமையான அதிகாரங்கள் மக்கள் கையில் உள்ளன.

அவர்கள் (மக்கள்) மாநிலங்களில் சட்டப்பேரவைகளுக்கு சட்ட மன்ற உறுப்பினர்களையும் மத்திய அரசின் மக்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கின்றனர்.

இந்தச் செயல்முறையை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளையும் முறையே சபாநாயகரும், மாநிலங்களவைத் தலைவரும் (இந்திய நாட்டின துணை ஜனாதிபதி) நடத்துகின்றனர்.

அவர்களுக்கு உதவிபுரிய முறையே துணை அவைத்தலைவரும் துணைசபாநாயகரும் உள்ளனர்.

நாட்டின் ஆட்சித்தலைவர் குடியரசுத்தலைவர் ஆவார்.

அனைத்து ஆட்சிச்செயல்களும் அவர் பெயராலேயே நடைபெறுகின்றன.

18 வயதுக்கு மேற்பட்ட எல்லா இந்தியக் குடிமக்களும் வாக்களித்து நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

குடியரசுத்தலைவர் பெரும்பான்மைக்கட்சியின் தலைவரை, ஆட்சி அமைக்க அழைக்கிறார்.

சிலசமயங்களில் ஒரு கட்சிக்குப் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காதபோது பலகட்சிகள் சேர்ந்து ஆட்சியை அமைக் கின்றன.
குடியரசுத்தலைவர் பிரதம மந்திரியின் ஆலோசனையுடன் அமைச்சரவையை அமைக்கிறார்.

அமைச்சரவையில் இரண்டு நிலைகளிலான அமைச்சர்கள் உண்டு –

அரசியலமைப்புச்சட்டத்தில் நீதியியல் துறைக்கு முழுமையான சுதந்திரமும் பாரபட்சமின்மையும் அளிக்கப்பட்டுள்ளது.

யூனியனில் உச்சநீதி மன்றம் மற்றும் மாநிலங்களில் உயர்நீதி மன்றங்களுக்கான ஏற்பாடு உள்ளது.

குடியரசுத்தலைவர் உச்சநீதி மன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்களின் நீதிபதிகளை நியமிக்கிறார்.

மைய அரசு நாடு மற்றும் மக்களின் நலனுக்காக பணியாற்றுகிறது.

மைய அரசு மற்றும் மாநிலங்கள் இரண்டு நிலைகளிலும் ஆட்சித்துறை அமைப்பு ஒன்றுபோல உள்ளது.

சில மாநிலங்களில் சட்ட மன்றத்தின் இரு அவைகள் அதாவது சட்டப்பேரவை மற்றும் சட்டமேலவை உண்டு, மற்றும் சில மாநிலங்களில் சட்டப்பேரவை மட்டுமே எல்லாப் பணிகளையும் நிறைவேற்றுகிறது.

ஆட்சிப்பணியின் ஒதுக்கீடு.

அரசு இயந்திரத்தை நடத்த அனைத்துப்பணிகளும் பங்கிடப்படுகின்றன.

இந்தப் பங்கீட்டின் அடிப்படையில் அமைச்சகங்கள் நிறுவப்படுகின்றன. அமைச்சகத்தை தேவைப்படி துறைகளாகப் பிரிக்கப்படுகிறது.

ஒவ்வொரு அமைச்சகத்தின் பணிப்பொறுப்பு அமைச்சரவை நிலை அமைச்சரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

ஓர் அமைச்சகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அமைச்சர்கள் இருக்கக்கூடும்.

அமைச்சகக்கொள்கைகளைச் செயல்படுத்தும் பொறுப்பு தொடர்புடைய அமைச்சருடைய தாகும்.

அமைச்சகம் அல்லது துறையின் நிர்வாகப் பொறுப்பு செயலருடையதாகும்.

அவரே அமைச்சகம் அல்லது துறையின் நிர்வாகத்தலைவர் ஆவார்.

கொள்கை தொடர்பான விஷயங்களில் அவர் அமைச்சரின் ஆலோசகர் ஆவார்.

அமைச்சகப்பணிகளை நல்லமுறையில் நிறைவேற்ற அதனை பல்வேறு சிறகங்கள், துறைகள், கிளைகள் மற்றும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.

சிறகத்தின் பொறுப்பதிகாரி இணைச்செயலர் ஆவார்.

துறையின் பணிப்பொறுப்பை இயக்குநர் அல்லது துணைச்செயலர் கவனிக்கிறார்.

கிளையின் பொறுப்பதிகாரி சார்புச்செயலரும் பிரிவின் பொறுப்பதிகாரி பிரிவுஅதிகாரியும் ஆவார்கள்.

பிரிவின் அலுவலகங்களை சரியான முறையில் நடத்திச்செல்ல உதவியாளர்கள், மேனிலை எழுத்தர்கள், கீழ்நிலை எழுத்தர்கள், தட்டச்சர்கள் மற்றும் நான்காம் வகுப்பு ஊழியர்கள் உள்ளனர்.

சில சமயங்களில் அமைச்சகத்தில் ஒன்றியமும் அமைக்கப்படுகிறது.

இவற்றை செல்கள் என்கின்றனர்.

அரசுக் கோட்பாடுகளைச் செயல்படுத்த அமைச்சகங்களின் கீழ் பிற அலுவலகங்களும் உள்ளன.

இந்த அலுவலகங்கள் இணைப்பு மற்றும் சார்புநிலை அலுவலகங்கள் எனப்படுகின்றன.

இணைப்பு அலுவலகங்கள் தொழில்நுட்பத் தகவல்களின் சேகரிப்புமையமாகும், அவை தொழில்நுட்ப நோக்குகளில் அமைச்சகத்துக்கு ஆலோசனை கூறுகின்றன.

சார்புநிலை அலுவலகங்களுக்கு அமைச்சகத்தின் கோட்பாடுகளைச் செயல்முறைப்படுத்தும் பொறுப்பு உண்டு.

சில இடங்களில் சார்புநிலை அலுவலகங்கள் இணைப்பு அலுவலகங்களில் கீழ் பணியாற்றுகின்றன எனின் சில இடங்களில் நேரடியாக அமைச்சகத்தின் கீழ் பணியாற்றுகின்றன.

இணைப்பு மற்றும் சார்புநிலை அலுவலகங்களின் துறைத்தலைவர் இயக்குநர் ஆவார்.

பல நேரங்களில் அமைச்சகங்களின் கீழ் சில தன்னாட்சி நிறுவனங்களும் அமைக்கப்படுகின்றன.

நிர்வாக முறையில் அவை அமைச்சகத்தின் கீழ் செயலாற்றுகின்றன.

ஒப்படைக்கப்பட்ட பணிகளை நிறைவேற்றுவதற்காக அமைச்சகம் அவற்றுக்கு உதவித்தொகை அளிக்கிறது.

இவைதவிர சட்டரீதியான நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது அரை அரசு நிறுவனங்கள் உண்டு.

இந்த நிறுவனங்களின் நிர்வாக அமைப்பு அமைச்சகங்களிலிருந்து வேறானதாகும்.

இவற்றின் உச்ச அதிகாரிகள் தலைமை இயக்குநர், தலைமை மேலாளர், ஆணையர் முதலியோர் ஆவார்கள்.

No comments:

Post a Comment