Oct 7, 2010

प्रवीण पाठमाला पाठ 13 से 18 तक का तमिल अनुवाद

(सौजन्य राजभाषा विभाग एवं सी डेक)
Lesson 13


பிரகாஷ் : கேள் தீபா!

அனந்தின் தொலைபேசி எதுவும் வந்ததா?

இதற்குள் அனந்தும் அவனுடைய தோழர்களும் மனாலி போய்ச் சேர்ந்திருப்பார்கள்.

நீ அவனுடைய சாமான்களில் கம்பளி உடைகளும் கம்பளிப்போர்வையும் வைத்தாயா இல்லையா ?


மார்ச் மாதத்தில் அங்கே காலை-மாலை நேரங்களில் நல்ல குளிர் இருக்கும்

தீபா : அனந்தின் தொலைபேசி வந்துவிட்டது

அவர்கள் மால் ரோடிலிருந்து ஒரு கிலோமீட்டர் மேலே ஏதோ ஒரு ஓட்டலில் தங்கியிருப்பதாக அவன் சொன்னான்

ஓட்டலைச் சுற்றிலும் மலைகள், அவற்றின் சிகரங்கள் பனியால் மூடப்பட்டுள்ளன.

வயள்களில் கடுகுச்செடிகள் பூத்திருக்கின்றன.

ஓட்டலிருந்து சிறிது முன்னால் ஒரு சிறிய கிராமம் உள்ளது.

இயற்கையின் அழகைப் பார்த்து அனந்த் சொக்கிப் போய்விட்டான்.

நாளைக் காலையில் அவன் வசிஷ்ட ரிஷி, தேவி ஹிடிம்பா மற்றும் மனுக் கோயில் காணப் போகவேண்டும்.

இப்போதிருந்தே அவர்கள் நாளைய பயணத்துக்்கான ஆயத்தங்களில் ஈடுப்பட்டிருப்பார்கள்.

( மறுநாள் மாலையில்)

பிரகாஷ் : இன்று குழந்தைகளுக்கு என்ன நிகழ்ச்சி?

தீபா : தெரியவில்லை, இப்போது தொலைபேசி எதுவும் வரவில்லை.

அவர்கள் இன்று காலையில் வியாச நதியில் குளித்திருப்பார்கள்.

குளியலுக்குப் பிறகு கோயிலில் தரிசனம் செய்திருப்பார்கள்.

இப்போது ஓட்டலின் முற்றத்தில் கேம்ப் ஃபயர் (கொண்டாட்டம்) நடந்து கொண்டிருக்கும்.

குழந்தைகள் ஆடிப்பாடிக் கொண்டிருப்பார்கள்.

சாப்பாடு நடந்து கொண்டிருக்கும்.

(மூன்றாவது நாள்)

பிரகாஷ் : தீபா, இன்று,ஒரு வேளை ,அனந்த் ஸோலாங் பள்ளத்தாக்குக்குச் சென்றிருப்பான்.

அங்கே பேரா-கிளைடிங் மற்றும் ஸ்கீயிங் நடக்கும்.

தீபா : உன்னுடைய அனுமானம் சரி தான்.

இன்று அவர்கள் பனிமூடிய மலைகளின் நடுவேயுள்ள ஸோலாங் பள்ளத்தாக்கில் இருப்பார்கள்.

பனியால் மூடப்பட்ட பள்ளத்தாக்கைக் கண்டால் பலமைல் தூரம் வரையிலும் பஞ்சு பரவிருப்பதாகத் தோன்றும்.

குழந்தைகளுக்கு இன்று உண்மையிலேயே புல்லரிக்கும்படியான அனுபவம் ஏற்பட்டுக் கொண்டிருக்கும்.

சிலர் பேரா-கிளைடிங் செய்து கொண்டிருப்பார்கள், சிலர் பனியின் மீது ஸ்கீயிங் செய்து கொண்டிருப்பார்கள்.

சில குழந்தைகள் டயரில் அமர்ந்து மலையிலிருந்து கீழே சறுக்கிக் கொண்டிருப்பார்கள்.

அனந்த் இயற்கையின் அழகை தன்னுடைய மூவி கேமராவில் பிடித்திருப்பான்.

அவன் திரும்பி வரும்போது நாம் எல்லாக் காட்சிகளையும் காண்போம்.

பிரகாஷ் : உண்மை தான், மனாயி போன்ற ரம்மியமான இடத்தை நான் இதுவரை கண்டதில்லை.

தன்னுடைய அழகு காரணமாக இது தேவதைகளின் பிரதேசமாகவும் கூறப்படுகிறது.

தீபா : ஆம், எனக்கு இன்றளவும் மனாலிப் பயணம் நினைவில் உள்ளது.

பிரகாஷ் : நல்லது, சற்றுநேரம் படிப்பின் பதற்றத்திலிருந்து விடுபட்டு எவில்மிகு இயறகையில் ஆனந்தமடைந்து கொண்டிருப்பார்கள்.

நமது நண்பர்கள், உடன்படிப்பவர்களுடன் இயற்கையின் மடியில் கழித்த நாள்கள் அவர்களுக்கு எப்பொழுதும் நினைவில் நிற்கும்.

Lesson 14

சிவநாத் பாபு மும்பையில் வசித்து வந்தார்.

அஞ்சல் துறையில் பணியாற்றி வந்தார்.

அவர் மகிழ்ச்சியாகவும் எல்லோருடனும் பழகுபவராகவும் இருந்தார்.

அடிக்கடி சிரிப்புத்துணுக்குகள் பேசுவார், இடையிடையே உரக்கச் சிரிப்பார்.

சிவநாத்பாபு, நாசிக்கில் வீடு கட்டுவித்துக் கொண்டிருந்தார்.

பணிஓய்வுக்குப் பிறகு கூட்டம் நெரிசலிருந்து அமைதியாக வாழ்க்கையைக் கழிக்க விரும்பினார்.

இவர் தம்முடைய குடும்பத்தை நாசிக்கில் விட்டு வைத்திருந்தார்.

இதன்மூலம் வீடும் கட்டப்படும், குழந்தைகளின் படிப்பும் தடையின்றி நடந்துக் கொண்டிருக்கும் அவர் எண்ணினார்.

சிவநாதி பாபு வீடு கட்டுவதற்குத் தம்முடைய 'வருங்கால வைப்பு நிதி'யிலிருந்து முன்பணம் எடுத்திருந்தார்.

தேவைகளைக் குறைத்து மிச்சம பிடித்து வந்த பணத்தையும் இதிலேயே செலவழித்து வந்தார்.

தம் விருப்படியான வீடு கட்டுவதற்கு அவர் நாசிக் செல்ல யோசித்துக் கொண்டிருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை அல்லது அரசாங்க விடுமுறை நாட்களில் அவர் அங்கே போவது வழக்கம், தன்னுடைய விருப்ப விடுமுறைகளையும் அவர் இப்படியே கழித்து வந்தார்.

மிகைநேரப் பணிக்கு பதிலாக இழப்பீட்டு விடுப்புக் கிடைக்கும்போது, அவர் அங்கே தான் போவது வழக்கம்.

அவர் இதற்காக இரண்டிரண்டு நன்னான்கு நாட்கள் தற்செயல் விடுப்பும் எடுத்து வந்தார்.

வருடத்தில் ஒருமுறை நீண்ட ஈட்டிய விடுப்பும் கட்டாயமாக எடுப்பார்; அப்போது ஞாயிற்றுக்கிழமை முதலிய மற்ற விடுமுறைகளையும் முன்னும்-பின்னும் சேர்க்க அனுமதி பெற்று அங்கே போய் வந்து கொண்டிருந்தார்.

அடிக்கடி, குழந்தைகளைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பார்- மகன் எப்படி படித்துக் கொண்டிருப்பான்.

கால அட்டவணைப்படி படித்துக் கொண்டிருப்பானாயில்லையா?

பெண் வளர்ந்து பெரியவளாகி விட்டாள் என்ற எண்ணம் அவர் மனதில் வந்துக் கொண்டிருந்தது.

கல்லூரிக்குப் பேருந்தில் போய்க்கொண்டிருப்பாள்.

தேர்வுக்கான ஆயத்தம் எப்படி செய்துக் கொண்டிருப்பாளோ.

நாசிக் வரும்போது, மனைவி திரைப்படம் பார்க்கப் போவது பற்றி பேசினால் அவர் பதில் கூறுவார்- இன்னும் சிலகாலம் வரை தான் தவம், பிறகு நம்முடைய வாழக்கையை விருப்பப்படி கழிக்கலாம்.

கடைசியில் ஒரு நாள் பணிஓய்வு பெற்று சிவநாத்பாபு நாசிக்கை அடைந்தார்.

வீட்டின் ஏற்பாடுகளை அவர் தன் கைகளில் எடுத்துக்கொண்டார்.

நான் என்னுடைய பொறுப்பை முழுமையாக நிறைவேற்றி வருகிறேன் என்று நினைத்து அவர் திருப்தியை உணர்ந்தார்.

இந்த அதிக உற்சாகத்தில் அவர் அடிக்கடி மகனுக்கு அறிவுரை கூற ஆரம்பித்தார்.

நேரத்தின் மதிப்பை புரிந்துகொள், சோம்பலாக இருக்காதே, வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டுமானால் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

மகளையும் தடுத்துக் கொண்டிருந்தார்.

சொல்வார்- ஃபேஷன் பற்றி கவனிக்காதே.

எளிமையாக இரு.

குழந்தைகளுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை.

தன்னுடன் உலாவ வரும்படி அவர் மனைவியிடம் கூறுவார்.

மனைவி வெட்கத்துடனும், கூச்சத்துடனும் கூறுவாள்-இந்த வயதான காலத்தில் நான் உங்களுடன் உலாவவது எனக்கு பிடிக்கவில்லை.

நான் இங்கே எப்படி இருந்து வந்தேனோ அப்படியே இருக்கவிடுங்கள்.

சிவநாத்பாபுவுக்கு, நான் இங்கே இருப்பது இவர்களுக்கு பிடிக்கவில்லை என்கிற உணர்வு தோன்றியது.

தகப்பனார் சரியானதைத் தான் கூறுவார், அது தானே எப்போதும் நடந்து வந்துள்ளது.

நான் இதில் என்ன தவறு செய்கிறேன்.

ஆனால் வேண்டாத மனிதனாகவும் இருக்க மனத்துக்குப் பிடிக்கவில்லை.

ஏன் மீண்டும் மும்பைக்குப் போகக்கூடாது என்று அவர் நினைத்தார்.

ஒரு முறை எல்லோரிடம் பேசலாம் என்று எண்ணம் வந்தது.

மறுநாள் சிவநாத்பாபு எல்லோரையும் ஒருமிக்க அழைத்தார்.

அவர் காலை உணவு மேடையில் அவற் கூறினார் - பெற்றோர்கள் குழந்தைகளின் நலனுக்காகத் தான் யோசிப்பார்கள் என்று.

இதில் என்ன தவறு?

உங்களுக்கு நான் இங்கே இருப்பது பிடிக்கவில்லை என்றால் நான் திரும்பவும் மும்பைக்குப் போய்விடுகிறேன்.

நான் முன்பு எப்படி இருந்து வந்தேனோ அப்படியே தான் இருந்து வருவேன்.

நீங்களும் உங்கள் விருப்பபடி வாழ்்ந்து கொண்டு இருக்கலாம்.

மனைவிக்கும் குழந்தைகளுக்கும் தங்கள் தவறு புரிந்து விட்டது.

அவர்கள் சிவநாத்பாபுவிம் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர்,மும்்பை போகும் எண்ணத்தை மனத்திலிருந்து அகற்றி விடுங்கள் என்று கூறினார்கள்.

தன்னுடைய கனவு நனவாகிவிட்டது என்று சிவநாத்பாபு முதன்்முறையாக உணர்ந்தார்.

Lesson 15

ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் உலகமுழுதும் பணியாற்றும் நிறுவனம், யூனிசெஃப் அதாவது ஐக்கிய நாடுகள் சபை குழந்தைகள் நிதி என்று அறியப்படுகிறது.

நம் நாட்டில் இந்த நிறுவனம் 1949-லிருந்து பணியாற்றி வருகிறது.

இந்த நிறுவனம் உலகெங்கிலுமுள்ள குழந்தைகள் அமைப்புகளுக்காகப் பணியாற்றுகிறது.

இந்த நிறுவனம் குழந்தைகளின் வளர்ச்சிக்காக முயன்று வருகிறது.

ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியின் கீழ் உரிமைகளின் காப்பு மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்காக உலகெங்கும் பணியாற்றுகிறார்கள்.

உதாரணமாக:-குழந்தைகளுக்குத் தேவையான மருந்்துகள், கல்வி, உடல்நலம் மற்றும் நெருக்கடி நிலைமைகளில் உதவி செய்தல் முதலியன.

ஒவ்வொரு குழந்தைக்கும் பிறந்ததலிருந்தே தன் பெயர், நாட்டு அடையாளம், முறையான பராமரிப்பு, நல்ல உடல்நலம் மற்றும் கல்வி பெற உரிமை உண்டு.

இது தொடர்பாக யூனிசெஃப் உறுப்பினர் நாட்டு அரசுகள் மூலம் குழந்தைகள் நலனுக்காக சட்டம் இயற்றச் செய்கிறது.

உலகின் பெரும்பாலான நாடுகள் தங்கள் குழந்தைகளின் காப்புக்காக யூனிசெஃப்க்குத் தங்கள் ஒப்புதலை அளித்துள்ளன.

குழந்தைகளின் பால் வேறுபாட்டை நீக்கி அவர்களின் நல்ல உடல்நலத்துக்காக சமச்சீரான உணவை உறுதிப்படுத்துகிறது.

இது பல்வேறு நாட்டு அரசுகள் மூலமாக குழந்தைகளுக்குத் தூய்மை-துப்பறவு,குடிநீர்் ,அடிப்படைக் கல்வி வசதிகள் கிடைக்கச் செய்கிறது.

இதோடுகூட குழந்தைகளை, சுரண்டல்் மற்றும் சித்திரவதைகளிலிருந்து விடுதலை செய்வது, தூய்மையான சுற்றுச்சீழல் கிடைக்க முயல்கிறது.

இந்த நிறுவனம் சின்னஞ்சிறு குழந்தைகளின் இறப்பு விகிதத்தைக் குறைக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கர்ப்பமான பெண்களை ஊட்டச்சத்து குறைவிலிருந்து காக்க சமச்சீரான உணவு நல்கவும் தேவையான நோய்த்தடுப்பு ஊசி போடும் ்இயக்கத்தையும் நடத்துகிறது.

குழந்தை பிறந்ததிலிருந்து ஆறு மாதங்கள் வரையிலும் தாய்ப்பால், மலேரியா சுரத்திலிருந்து, வயிற்்றுப் போக்கிலிருந்து காப்பதற்காக உயிர் காக்கும் கரைசல் குடிக்கச்செய்யும் ஆலோசனை அளிப்பதுடன் மற்ற வசதிகளையும் செய்து வருகிறது.

இந்த நிறுவனம் தன்னார்வ நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் பொதுமக்களை விழிப்படைய செய்ய பரவலான பிரச்சாரப்பணி செய்விக்கிறது.

யூனிசெஃப் குழந்தைகளின் பார்வை ஊனம் மற்றும் இளம்பிள்ளைவாத நிவாரணத்துடன் குரல்வளைச் சுரப்பி வீக்கம், இக்குவான் இருமல் மற்றும் தொண்டை அழற்சி நோயிலிருந்து காப்பிற்காக வைடமின்-ஏ,அயோடின் மற்றும் இதர மருந்துகள் அளிக்கிறது.

இவ்வாறு யூனிசெஃப் உலகெங்கிலுமுள்ள குழந்தைகளின் நலனுக்காக பணியாற்றுகிறது.

இது தன் செயல் முறைத் திட்டங்களை உலகின் அரசுகள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் தனிமனிதர்கள் மூலமாக நடைமுறைப்படுத்துகிறது.

Lesson 16

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி நம்நாட்டின் வரலாற்றில் சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்தது.

அப்போது நாட்டில் அநேக மகாபுருஷர்கள் பிறந்தனர்.

இந்த மகாபுருஷர்களில் சமூகச்சீர்திருத்தவாதிகள், சிந்தனையாளர்கள் மற்றம் உலகப்புகழ் வாய்ந்த அரசியல் தலைவர்களும் இருந்தனர்.

சுவாமி விவேகானந்தர் அவர்களில் ஒருவர்.
1893 ஜனவரி 12 - ஆம் தேதியன்று மகரசங்கராந்தி நாளில் கொல்கத்தாவின் புகழ்பெற்ற வழக்கறிஞர் திரு. விஸ்வநாத தத் வீட்டில் விவேகானந்தர் பிறந்தார்.

விவேகானந்தரை சிறுபிராயத்தில் அன்புடன் நரேன் என்று அழைத்தனர்.

நரேந்திரர் குழந்தைப்பருவத்திலிருந்தே மிகுந்த புத்திசாலியாக இருந்தார். அவருடைய நினைவாற்றல் மிகவும் கூர்மையானது.

நரேன் கொல்கத்தா பல்கலைக்கழகத்திலிருந்து இண்டர் மற்றும் பி.ஏ.தேர்ச்சியடைந்தார்.

கல்லூரி நாட்களில் வெவ்வேறு விஷயங்களிலான புத்தகங்கள் படிப்பதில் அவருக்குச் சிறப்பான ஆர்வம் இருந்தது.

அவருடைய படிப்பறையில் எங்கு பார்த்தாலும் புத்தகங்கள் மட்டுமே காணப்பட்டன.

அவருடைய ஆங்கிலப் பேராசிரியரான டபிள்யூ.டபிள்யூ.ஹேஸ்டி, நரேன் மேதமை வாய்ந்த மாணவர் என்று எழுதியுள்ளார்.

நான் நரேனில் கண்ட மேதமையும் திறமையும் வேறெங்கும் காணப்படவில்லை.

உண்மையில் ஜெர்மனியின் பல்கலைக்கழகங்களில் தத்துவம் பயிலும் மாணவர்களில் கூட இம்மாதிரி மேதமை வாய்ந்த மாணவர் எவரும் கிடைக்கவில்லை.

படிப்புடன் இசையிலும் அவருக்கு விசேஷமான ரசனை இருந்தது.

அவர் புத்தக அறிவில் மட்டும் திருப்தி அடையவில்லை, மாறாக உண்மையின் அடிப்படையிலான அறிவை அடைய முயன்றுகொண்டே இருந்தார்.

அந்த சமயத்தில் வங்காளத்தில் ராஜாராம்மோகன்ராய் பிரம்ம சமாஜத்தை நிறுவினார்.

விவேகானந்தர் அதனால் மிகுந்த தாக்கமடைந்தார். அவர் பிரும்ம சமாஜத்துடன் இணைந்தார்.

ஆனால் அவருடைய பல ஐயப்பாடுகளுக்குத் தீர்வு அங்கே கிடைக்கவில்லை.

1882, ஜனவரி 15-ஆம் தேதி நரேனுடைய வாழ்க்கையின் மிக மிக முக்கியமான நாளாக இருந்தது.

அன்றைய தினம்தான் சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சருடன் அவருடைய சந்திப்புநிகழ்ந்தது.

சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சரின் அறிவுரைகளினால் அவர் மிகவும் தாக்கம்பெற்றார்.

அவருடைய விவேகம் எழுச்சிபெற்றது, மக்கள் அவரை விவேகானந்தர் என்று அழைக்கத்தொடங்கினார்கள்.

1893, செப்டம்பர் 11-ஆம் தேதி சிகாகோ (அமெரிக்கா) வில் கூடிய சர்வதேச சமயமாநாட்டில் அவர் தன் உரையை 'அமெரிக்காவில் வசிக்கும் சகோதரர்களே, சகோதரிகளே' என்று அழைத்து ஆரம்பித்தபோது அரங்கு கைதட்டல்களால் முழங்கியது.

அரங்கில் பார்க்குமிடங்களில் எல்லாம் மக்கள் அவர் பேச்சைக் கேட்க ஆவலுள்ளவர்களாக காணப்பட்டனர்.

பாரதத்தின் இந்த அறியப்படாத சுவாமி திடீரென உலகப்பிரசித்தி அடைந்தார், ஏனெனில் அவருடைய உரையில் இந்திய மற்றும் மேற்கத்தியப்பண்பாட்டின் இணைப்பு இருந்தது, அது வேறெவருடைய பேச்சிலும் இருக்கவில்லை.

அவருடைய ஆளுமையில் ஓர் அற்புதமான ஈர்ப்பும் கம்பீரமும் இருந்தது.

அவருடைய குரலில் ஒரு வசீகரம் இருந்தது.

அவர் ஓர் உபதேசம் செய்பவர் போல அன்றி முழுமையான தன்னுரிமையுடன் பேசினார்.

அவருடைய பார்வையில் பணிசெய்வதுதான் உண்மையான வழிபாடு.

வயல், களஞ்சியம், பள்ளிக்கூடம், தொழிற்சாலை அல்லது விளையாட்டு மைதானம் என்று எந்தத்துறையிலும் நாணயத்துடன் செய்யப்படும் செயல்தான் உண்மையான தருமம், இந்த இடங்கள் எல்லாம், துறவியின் குடில் அல்லது கோவில் வாசல் எந்த அளவுக்குத்தூய்மையானதோ, அந்த அளவு தூய்மையானவை.

இவ்வாறு அவர் வாழ்வில் கடவுளை தரிசிக்க உழைப்பையே (செயலை) சரியானமார்க்கம் என்று கருதினார்.

சுவாமி ஒருபுறம் சமயத்துக்கு விளக்கம் அளித்தார், மறுபுறம் சமூகச்சீர்திருத்தத்தையும் வலியுறுத்தினார்.

நமது அரசியல் சாஸனத்தில் கற்பனை செய்யப்பட்டுள்ள மதச்சார்பின்மை மற்றும் பொதுவுடமையின் அடிக்கல்லை விவேகானந்தர் முன்னமேயே நாட்டிவிட்டார்.

அவர் எப்பொழுதுமே ஏழைகளின் உயர்ச்சி பற்றியே பேசினார்.

பெண் கல்வி மற்றும் பெண்விடுதலையை வலியுறுத்தினார்.

அவர் கல்வியை, தனிமனிதன் மற்றும் சமூகத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாகக் கருதினார்.

நம்நாட்டில் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் 'இளைஞர்கள் தினமாக'க் கொண்டாடப்படுகிறது.

இதுதான் சுவாமி விவேகானந்தர் பால் உண்மையான நினைவஞ்சலியாகும்.

Lesson 17

நான் காலையில் செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தேன்.

செய்தித்தாளின் முதல் பக்கத்திலேயே பெரிய விளம்பரம் அச்சாகி இருந்தது, அதில் ராமலீலா மைதானத்தில் ஒரு பிரம்மாண்டமான கண்காட்சி நடப்பது பற்றிய தகவல் இருந்தது.

ஞாயற்றுக்கிழமையாதலால், நான் நாள்முழுவதும் ஓய்வு எடுக்க விரும்பினேன்.

சிறிது நேரம் கழிந்ததுமே என் மொபைல்ஃபோன் மணி அடித்தது.

(அது ) என் நெருங்கிய நண்பனின் ஃபோனாக இருந்தது.

அவர், பொருட்காட்சி காண்பதற்கு நானும் கூடச்செல்ல வேண்டுமென்று மிகவும் விரும்பினார்.

எனக்கு வெளியே போக விருப்பம் இருக்கவில்லை, எனினும் நான் அவரிடம் மறுக்கமுடியவில்லை.

சிறிதுநேரத்தில் என் நண்பர் தன்னுடைய காரை எடுத்துக்கொண்டு வந்துவிட்டார்.

கண்காட்சித்திடல் வெகுதூரத்தில் இருக்கவில்லை, அதனால் அரைமணிநேரத்திலேயே நாங்கள் கண்காட்சி இடத்தை அடைந்தோம்.

கூட்டம் மற்றும் விசேஷப்பாதுகாப்பு ஏற்பாடு காரணமாக வண்டியை பார்க் செய்வதில் வெகுநேரம் ஆகிவிட்டது.

கண்காட்சியின் கம்பீரமான அழகு வெளியிலிருந்து பார்க்கும்போதே தெரிந்தது.

சிறிது நேரத்திலேயே நாங்கள் டிக்கட் வழங்கும் சன்னல் வரை போய்ச்சேர்ந்தோம்.

கண்காட்சிக்கான கட்டணம் மிக அதிகமாக இருந்தது, ஆனாலும் பார்வையாளர்களின்கூட்டம் அதிகமாக இருந்தது.

ஒருவேளை இன்று யாரோ சிறப்பு விருந்தினர் கண்காட்சி காண வருகிறார்போலும்.

டிக்கெட் எடுத்துக்கொண்டு நாங்கள் உள்ளே சென்றோம், அங்கே குழந்தைகள்,வயதானவர்கள், இளைஞர்களின் கூட்டம் மட்டுமல்ல, பெண்களும் மிக அதிகமான எண்ணிக்கையில் வந்திருந்தனர்.

கண்காட்சியில் நிறைய மண்டபங்கள் இருந்தன.

ஒருபக்கம் ஆயத்த ஆடைகளின் ஸ்டால்கள் இருந்தன, மறுபக்கம் தோல் மற்றும் ரெக்ஸினால் செய்த பொருள்களின் விற்பனைச்சாவடி இருந்தது.

பெண்களுக்கான உடைகளின் ஸ்டாலில் கூடியிருந்த கூட்டத்தைப்பார்த்தால், அங்கே பொருள்கள் ஏதோ இலவசமாகக் கிடைக்கிறதோ என்று தோன்றியது.

பொருள்களின் விலை குறைவாக இருக்கவில்லை எனினும் விற்பனை நிரம்ப நடந்து கொண்டிருந்தது.

மரச்சாமான்கள் மற்றும் மின்சாரக்கருவிகளின் கடைகள் பல இருந்தன.

பெரும்பாலான மின்னனுப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

மொபைல்ஃபோன் முதல் கணினி வரையில் எல்லாமே இந்த ஸ்டால்களில் கிடைக்கும் என்றாலும் வாங்குபவர்கள் குறைவாக இருந்தனர்.

எங்களுக்கு விசேஷமாக எதுவும் வாங்கவேண்டியதாக இல்லை எனினும் நாங்கள் பொருள்களின் விலையைக் கேட்டோம்.

சில பொருள்கள் பிடிக்கவும் செய்தன ஆனால் அவற்றின் தரம் பற்றி நம்பிக்கை ஏற்படவில்லை.

நாங்கள் அன்றாடம் உபயோகப்படும் சில பொருள்கள் வாங்கினோம்.



நாங்கள் மிகவும் களைத்துப்போயிருந்தபோதிலும் இன்னும் சுற்றித்திரிய மனம் விரும்பியது.

கடைசியில் களைப்பாற்றிக்கொள்வதற்காக நாங்கள் ஒரு திறந்த உணவகத்தில் உட்கார்ந்தோம்.

உணவகத்தில் இட்டிலி, தோசை, பாவ்பாஜி மற்றும் ராஜஸ்தானி பலகாரங்கள் நிறைய இருந்தன, நாங்கள் பாவ்பாஜி சாப்பிட்டு தேநீர் அருந்தினோம், பிறகு சிறிது நேரத்துக்குப்பின் வீடு திரும்பி வந்தோம்.

Lesson 18

இன்று மாலையில் அலுவலகத்திலிருந்து வீடுவந்து சேர்ந்ததுமே, மனைவி ஒரு கடிதத்தைக் கையில் வைத்தாள்.

இன்றைய மொபைல், ஃபேக்ஸ், ஈ-மெயில் யுகத்தில் 'கடிதம்' வருவது எந்த ஆச்சரியத்தையும் விடக்குறைவல்ல.

இப்போதெல்லாம் வாழ்த்துக் கடிதம் அனுப்புவதைக் கூட மக்கள் மறந்து விட்டார்கள்.

புதுவருடம், ஹோலி, தீபாவளி, பொங்கல் முதலியவற்றுக்கான வாழ்த்துச்செய்திகள் தொலைபேசி மற்றும் ஈ-மெயில் மூலமாக அனுப்பப்படத் தொடங்கிவிட்டன.

கடிதத்தைக் கையில் எடுத்ததுமே என் பார்வை இம்ஃபால் அஞ்சலக முத்திரை மீது பதிந்தது.

அதைக்கண்டு, 1981-லிருந்து 1984-க்கு இடையில் இம்ஃபாலில் கழித்த நாட்கள் திரைப்படம் போல என் கண்களின் முன் சுழலத் தொடங்கின.

இருபத்தோரு வருடங்களுக்கு முந்திய லோக்கன் சிங் என் முன்னால் வந்து நிற்பது போலத்தோன்றியது.

மணிப்புரிலுள்ள மக்கள் தொகைச்செயற்பாட்டு இயக்கத்தில் மொழிபெயர்ப்பாளர் பதவியில் நான் என் முதல் வேலை நியமனம் பெற்றேன்.

கிட்டத்தட்ட என்னுடனேயே லோக்கன் சிங்கின் நியமனமும் கீழ்நிலை எழுத்தர் பதவியில் நடந்தது.

லோக்கனின் வீடு இம்ஃபாலிலிருந்து ஏறத்தாழ 26 கி.மீ. தொலைவில் பிஷன்பீரில் இருந்தது.

சாதாரணமான முகம், சுத்தமான மணிப்புரி அச்சில் அமைந்த முகவெட்டு, உறுதியான உடல்வாகுகொண்ட லோக்கன் சிங் சாதாரண மைதேயிகளைக்காட்டிலும் சற்றுத ்தனியாகவே காணப்பட்டான்.

அவனுடைய மனம்திறந்த சிரிப்பும் கள்ளங்கபடமற்ற நடத்தையும் காரணமாக நான் அவனிடம் ஈர்க்கப்பட்டேன், எங்கள் நட்பு மெல்ல மெல்ல ஆழமாக தொடங்கியது.

நாங்கள் இருவரும் மணிக்கணக்காக அமர்ந்து பல்வேறு விஷயங்கள் பற்றிச் சர்ச்சைசெய்வோம்.

மைத்தேயிகள் உள்முகச்சிந்தனைப்பாங்கு உள்ளவர்களாயினும், மயாங்கு (வெளிமாநிலத்தவர்)களுடன் கலந்து பழக விரும்பாதவர்களாயினும், அவர்கள் விருந்தினரை மிகவும் மதிக்கிறார்கள்.

இவர்களுக்கு யாரையாவது தங்கள் வீட்டுக்கு அழைப்பது அவருக்குப் பெரிய கௌரவமாகும்.

ஒருநாள் லோக்கன் சிங் என்னை அவர்கள் வீட்டுக்குச் சாப்பிட அழைத்தான்.

அழைப்பைப் பெற்று நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

மறுநாள் காலையில் நான் பேருந்து நிலையத்தை அடைந்தேன்.

அங்கே சூடாசாந்த்புர் போகும் பேருந்து நின்றிருந்தது.

இந்தப் பேருந்து பிஷன்புர் வழியாகச் செல்கிறது.

பிஷன்புர் சென்று சேர சுமார் ஒருமணிநேரம் பிடிக்கிறது.

நான் பேருந்தில் அமர்ந்து, அவனுடைய வீட்டைப்பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்,எனக்கு உறக்கம் வந்துவிட்டது.

பேருந்திலிருந்து இறங்கியதுமே லோக்கன்சிங் கையை அசைத்து என்னை அழைக்கலானான்.

நாங்கள் இருவரும் வீட்டை அடைந்ததுமே அவனுடைய தகப்பனார் வீட்டுக்கு வெளியே வந்துவிட்டார்.

லோக்கன் அவருக்கு என்னை அறிமுகப்படுத்தத் தொடங்கினான்.

நான் 'குர்மஜரி' (வணக்கம்) சொல்லி அவரை வணங்கினேன்.

அவனுடைய தகப்பனார் ஆசிரியர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றவிட்டார்.

அவனுடைய சகோதரி படிப்பை முடித்து விட்டிருந்தாள். அவளுக்கு வேலை கிடைத்துவிட்டது.

ஓடுவேய்ந்த அவர்களின் வீடு சிறப்பான மணிப்புரி பண்பாட்டை பிரதிபலித்தது.

வீட்டுக்குப்பின்னாலுள்ள குளம் தாமரை மலர்களால் நிரம்பியிருந்தது.

மூங்கில் சாதனங்களினால் அலங்கரிக்கப்பட்ட வரவேற்பறை மேசைமீது சாப்பாடு பரிமாறப்பட்டிருந்தது.

சாப்பாட்டில் பலவிதமான சட்டினிகள் இருந்தன, அவற்றில் இரோம்போ மிகவும் ருசியானதாக இருந்தது.

பப்பாளி மற்றும் வாழைக்காயினால் செய்த கறியை நான் முன்பே சாப்பிட்டிருக்கிறேன், ஆனால் மூங்கிலினால் செய்த கறியையும் மூங்கில் ஊறுகாயையும் முதல்முறை சாப்பிட்டேன்.

சாப்பாடு மிகவும் ருசிகரமாக இருந்தது.

சாப்பாட்டிற்குப்பிறகு நாங்கள் பேசத்தொடங்கினோம். மாலை ஆகிவிட்டது, சூரியன் மறையத் தொடங்கியிருந்தது.

நான் திரும்பும் போது அவனுடைய தகப்பனார் தன் கையினால் செய்த மூங்கில் கூடையையும் அவனுடைய சகோதரி மணிப்புரி சால்வையும் விரிப்பும் எனக்கு அன்பளிப்பாகத்தந்தனர்.

அன்பின் அடையாளமான இந்தப் பரிசு இன்றும் எனக்கு எல்லையற்ற விலைமதிப் பற்றதாகும்.

திரும்பும்போது அவர் என்னை லோக்டக் ஏரிக்குச் செல்லும்படி கூறினார்.

அந்த இடம் நான் ஏற்கனவே பார்த்தது, அதனால் நான் அங்கே செல்லவில்லை.

அந்நாட்களில் அலுவலகம் வாரத்தில் ஆறுநாட்கள் இயங்கிவந்தது.

அலுவலக நேரமும் காலை 10.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை இருந்தது.

ஒவ்வொருமாதமும் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறையாக இருந்தது.

விடுமுறை நாளில் அக்கம்பக்கத்தில் சுற்றிப்பார்ப்பது மிக நன்றாக இருந்தது.

இம்ஃபாலிலும் பலமாடிக்கட்டிடங்களும், அலுவலக வளாகங்களும் கட்டப்படத் தொடங்கியிருந்தன.

சில கட்டிடங்கள் கட்டிமுடிந்துவிட்டன, சில கட்டப்பட்டுக்கொண்டிருந்தன.

பாவோனா கடைத்தெருவின் அருகில் பி.டி.சாலையில் விளையாட்டு வளாகம் கட்டப்படத் தொடங்கியிருந்தது.

கடிதத்தில் அவன் என்னைக்குடும்பத்துடன் இம்ஃபால் வரும்படி அழைத்திருந்தான்.

கடிதத்தைப்படித்ததும் லோக்கன் சிங்கைச் சந்திக்கும் ஆசை அதிகரிக்கலானது.

நான் குடும்பத்துடன் இம்ஃபால் செல்லத் திட்டமிட ஆரம்பித்தேன்.

No comments:

Post a Comment