(सौजन्य राजभाषा विभाग एवं सी डेक)
Lesson 19
ரமேஷ் : வாழ்த்துக்கள், இந்தத்தடவை இந்தி பட்சத்தின் (இருவாரங்கள்) நிறைவு விழாஏற்பாடு மிகவும் நன்றாக இருந்தது என்று கேள்விப்பட்டேன்.
தினேஷ் : ஆம், எல்லோருடைய தொடர்ந்த ஒத்துழைப்பினால் நிகழ்ச்சி வெற்றிகரமாயிற்று.
இம்முறை மக்களும் அதிக எண்ணிக்கையில் வந்திருந்தனர்.
அரங்கமும் மிகவும் நிரம்பியிருந்தது.
ஆமாம், நீ ஏன் நிகழ்ச்சிக்கு வரவில்லை சொல்லு?
அழைப்பிதழ் சரியான நேரத்தில் கிடைக்கவில்லையா?
ரமேஷ் : இம்முறை அழைப்பிதழ் மிக முன்னதாகவே கிடைத்துவிட்டது, ஆனால் விஷசுரம் காரணமாக நான் விரும்பியும் கூட வரமுடியவில்லை.
சீக்காக இருக்கும்போது எப்படி வருவேன்?
தினேஷ் : ஆகா, நீயும் வந்திருக்கவேண்டும், ஏனென்றால் இந்தத்தடவை நிகழ்ச்சிமிக நன்றாக இருந்தது.
ஒவ்வொரு நிகழ்ச்சியும் இயக்குநர் அம்மாவின் இயக்கத்தில் நடந்தது.
அவர் தனிப்பட்ட ஆர்வம் எடுத்திராவிட்டால் ஒருவேளை நிகழ்ச்சி இத்தனை வெற்றிகரமாக ஆயிருக்காது என்று நான் நினைக்கிறேன்.
ரமேஷ் : சுகவீனமாக இருந்தாலும் நான் உன்னுடைய நிகழ்ச்சியின் சில பகுதிகளை தொலைக்காட்சியில் கண்டேன்.
கலைநிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக இருந்தது.
தினேஷ் : ஆம், இம்முறை விழாவின் முக்கியமான கவர்ச்சி, கலைநிகழ்ச்சிதான் என்று நான் நினைக்கிறேன்.
பாடல் மற்றும் நாடகத்துறையின் கலைஞர்கள் முன்வைத்த நிகழ்ச்சி விழாவின்மகுடமாக இருந்தது.
மணிப்புரி ராஸின் அழகு காணத்தெவிட்டாததாக இருந்தது.
ரமேஷ் : கர்பா நடனமும் குஜராத்தியப்பண்பாட்டின் உயிரோட்டமான காட்சியைமுன்வைத்தது மேலும் இந்திப் பாடல்களினால் நிகழ்ச்சியின் அர்த்தத்தன்மை நிரூபணமாயிற்று.
தினேஷ் : நீ செய்தித்தாள்களில் எங்கள் நிகழ்ச்சி பற்றிய எதிர்வினைக் கருத்துக்களைப் பார்த்தாயா?
ரமேஷ் : ஆம், இம்முறை இரண்டு - மூன்று செய்தித்தாள்கள் விழாபற்றிய விவரமான செய்திகளை வெளியிட்டுள்ளன.
இதில் சில புகைப்படங்களும் பிரசுரமாகியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
தினேஷ் : நீ 'ஜன் ஜகாரன்' பார்க்கவில்லை என்று தெரிகிறது.
அதில் புகைப்படங்களும் அச்சாகியிருந்தன.
ரமேஷ் : இல்லை, நான் எங்கிருந்து பார்ப்பேன்?
என்வீட்டில் இந்தச் செய்தித்தாள் வருவதே இல்லை.
நிகழ்ச்சியில் அறிவிப்பாளரின் அரங்க இயக்கம் எப்படி இருந்தது?
தினேஷ் : அரங்க இயக்கம் நன்றாகவே இருந்தது, ஆனால் பரிசுவென்றவர்கள் அதிகமாகி விட்டனர், ஏனெனில் இம்முறை அதிகப்படியாக இரண்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
ரமேஷ் : அப்படியானால் பரிசளிப்பு நிகழ்ச்சியில் மிகுந்தநேரம் ஆகிவிட்டிருக்குமே?
தினேஷ் : ஆம், இதுகாரணமாக இயக்குநர் அம்மா அலுவலகத்தின் சாதனைகள் பற்றிய விவரங்களை முன்வைப்பதில் நேரப்பற்றாக்குறை கடுப்பாகத்தோன்றியது.
அதிகநேரம் கிடைத்திருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும்.
ரமேஷ் : நான் நிகழ்ச்சிக்கு வந்திருந்தால் முக்கிய விருந்தினரின் முழுப்பேச்சையும் கேட்டிருப்பேன்.
இந்தத்தடவை பத்திரிகைகளில் அவருடைய உரை மிகவும் புகழப்பட்டது.
தினேஷ் : ஆம், சிறப்புவிருந்தினர் உலகில் இந்தியின் வளர்ந்துவரும் முக்கியத்துவம் குறித்து சர்ச்சைசெய்து அதன் சிறப்பை நிரூபித்தார்.
அவர்கூறினார் - இந்தி உலகின் ஒரு முக்கியமான மொழி.
இந்தி பேசுபவர்களும் புரிந்துகொள்பவர்களுமான மக்கள் உலகில் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள்.
உலகமொழி என்ற அளவில் இந்தியின் வளர்ச்சி, பிரச்சாரம் மற்றும் பரவலுக்கு நாம் நம்மால் முடிந்த முயற்சி செய்யவேண்டும்.
அவருடைய உரையை எல்லாக் கேட்பாளர்களும் கைதட்டிப் பாராட்டினர்.
கடைசியில் சிற்றுண்டியுடன் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவுபெற்றது.
Lesson 20
தேவகட் சமஸ்தானத்தின் திவான் சர்தார் சுஜான் சிங். மூப்படைந்ததும் அவர் அரசரிடம் சென்று கேட்டுக் கொண்டார், 'அரசே, உங்கள் தாசனான நான் தங்களுக்கு 40 ஆண்டுகள் வரை சேவை செய்தேன்'.
இப்போது எனக்கு வயதாகிவிட்டது, அரசுக்காரியங்களைக் கவனிக்கும் ஆற்றல் இப்போது இல்லை.
எங்கேனும் தவறுநிகழ்ந்துவிட்டால் முதுமையில் களங்கம் ஏற்பட்டுவிடும்.
அரசர் தம்முடைய நீதிமானான திவானை மிகவும் மதித்து வந்தார்.
அவர் திவானிடம் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார், ஆனால் அவர் ஏற்காத போதுசலித்துப்போய் அவருடைய வேண்டுகோளை ஏற்றார், ஆனால் சமஸ்தானத்துக்குப் புதிய திவானை நீங்கள் தான் தேடித்தரவேண்டும் என்ற நிபந்தனை விதித்தார்.
மறுநாள் நாட்டில் பிரபல செய்தித்தாள்களில், தேவகட் சமஸ்தானத்துக்கு ஒரு தகுதிவாய்ந்த திவான் தேவை என்ற விளம்பரம் வெளியிடப்பட்டது.
எந்த மனிதர்கள் தம்மை இந்தப்பதவிக்குத் தகுதியானவர் என்று கருதுகிறார்களோ அவர்கள் இப்போதைய திவான் சர்தார் சுஜான் சிங்குடன் தொடர்பு கொள்ளவும்.
அவர்கள் பட்டதாரிகளாக இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை, ஆனால் உடல்நலம் நன்றாக இருக்க வேண்டும்.
ஒருமாதம் வரையிலும் வேட்பாளர்களின் வாழ்க்கைமுறை, எண்ணங்கள் - நடத்தைகள் ஆராயப்படும்.
கல்வித்தகுதி பற்றிக்குறைவாகவும் கடமையாற்றல்பற்றி அதிகமாகவும் கவனிக்கப்படும்.
எந்தக்கனவான் இந்தத்தேர்வில் வெற்றி பெறுவாரோ அவர் இந்தப்பதவியில் அமர்த்தப்படுவார்.
இந்த விளம்பரம் நாடெங்கும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இத்தனை உயர்ந்த பதவி, எந்தவிதமான தடைகளும் இல்லை.
நூற்றுக்கணக்கான மனிதர்கள் அவரவர் பாக்கியத்தை பரீட்சித்துப்பார்க்கப் புறப்பட்டனர்.
சர்தார் சுஜான் சிங் இந்தக்கனவான்களின் வரவேற்பு - உபசாரங்களுக்காக வேண்டிய ஏற்பாடு செய்திருந்தார்.
ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையை தன்னுடைய அறிவுக்கு ஏற்றபடி நல்ல முறையில் காண்பிக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர்.
ஆனால் மனிதர்களில் வைரத்தைக்கண்டு பிடிப்பதில் வல்லுநரான சுஜான்சிங் மறைந்திருந்து, இந்தக் கொக்குகளினிடையே அன்னம் எங்கே மறைந்திருக்கிறது என்று பார்த்துக்கொண்டிருந்தார்.
ஒருநாள் இளைஞர்கள் ஹாக்கி விளையாட்டுக்கு ஏற்பாடு செய்தனர்.
விளையாட்டு மிகவும் உற்சாகத்துடன் நடந்துகொண்டிருந்தது.
அவர்கள் பந்தை எடுத்துக்கொண்டு வேகமாகப்பாயும் போது, முன்னேறும் அந்த அலையை மற்றவர்கள் இரும்பாலான சுவர்போலத் தடுத்தனர்.
அந்தி நேரம் வரை இதே கோலாகலம் தான்.
அவர்கள் வியர்வையினால் நனைந்து போயினர்.
வேகமாக மூச்சுவாங்கி, விளையாட்டு வீரர்கள் களைத்துவிட்டார்கள். ஆனால் வெற்றி - தோல்வி நிர்ணயிக்கப்படவில்லை.
இருட்டாகிவிட்டது.
இந்தமைதானத்திலிருந்து சற்று தூரத்தில் ஒரு கால்வாய் இருந்தது.
அதன் மேல், பாலம் எதுவும் இருக்கவில்லை, அங்குமிங்கும் வந்துபோகும் மக்கள் கால்வாயில் இறங்கிப்போகவேண்டி வந்தது.
விளையாட்டு அப்பொழுது தான் முடிந்திருந்தது, அவர்கள் மூச்சுவாங்கிக் கொண்டிருந்தார்கள், அப்போது ஒரு விவசாயி தானியங்கள் நிறைந்த வண்டியுடன் கால்வாய்க்கு வந்தார்.
ஆனால் ஒன்று கால்வாயில் சேறாக இருந்தது பிறகு அதன் ஏற்றம், வண்டிமேலேஏற முடியாதபடி உயரமாக இருந்தது.
அவன் சிலசமயம் காளைகளை உசுப்புவான், சிலசமயம் சக்கரங்களைக் கைகளால் தள்ளுவான் ஆனால் பாரம் அதிகமாக இருந்தது, காளைகள் வலுவின்றி இருந்தன.
வண்டி மேலே ஏறாது, ஏறினாலும் சிறிதுதூரம் ஏறிவிட்டு மீண்டும் வழுக்கிக் கீழே வந்துவிடும்.
விவசாயி மீண்டும் மீண்டும் பலத்தை பயன்படுத்துவான் அடிக்கடி சலிப்படைந்து காளைகளை அடிப்பான், ஆனால் வண்டி மேலே ஏறும் சுவடே இல்லை.
பாவம் விவசாயி நிராசையுடன் அங்குமிங்கும் பார்த்தான் ஆனால் அங்கே யாரும் காணப்படவில்லை.
வண்டியைத் தனியாக விட்டு எங்கும் போகவும் முடியவில்லை.
அவன் ஒரு பெரிய பிரச்சனையில் சிக்கியிருந்தான்.
இதற்கிடையில் விளையாட்டுவீரர்கள் கைகளில் ஹாக்கிமட்டையுடன் சுற்றியவாறு அந்தப் பக்கமாக வந்தனர்.
விவசாயி அவர்கள் பக்கம் தயக்கம் நிறைந்த கண்களுடன் பார்த்தான், ஆனால் யாரிடமும் உதவி கோரும் துணிச்சல் ஏற்படவில்லை.
விளையாட்டு வீரர்களும் அவரைக்கண்டனர், ஆனால் மூடியகண்களால்.
அந்தக்குழுவில் இதயத்தில் கருணையும் துணிவும் கொண்ட ஒரு நபர் இருந்தான்.
இன்று ஹாக்கி விளையாடும் போது அவனுடைய கால்களில் காயம் பட்டிருந்தது.
அவன் நொண்டிக்கொண்டே மெல்ல - மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தான்.
எதேச்சையாக அவனுடைய பார்வை வண்டியின் மேல் விழுந்தது.
அவன் நின்று விட்டான்.
விவசாயின் முகத்தைப்பார்த்ததுமே அவனுக்கு எல்லாம் புரிந்துவிட்டது.
அவன் ஹாக்கிமட்டையைக் கரையில் வைத்தான், கோட்டைக் கழற்றினான், விவசாயின் அருகில் சென்று கேட்டான், 'நான் உன்னுடைய வண்டியை மேலே ஏற்றட்டுமா?'
விவசாயி பார்த்தான், நலமான உடல்வாகு கொண்ட ஒரு உயரமான இளைஞன் முன்னே நிற்கிறான்.
குனிந்தபடி கூறினான், 'ஐயா, நான் உங்களிடம் எப்படிக் கூறுவேன்?'
இளைஞன் சொன்னான், 'நீ இங்கு வெகுநேரமாக சிக்கியிருப்பதாகத் தோன்றுகிறது'.
நல்லது, நீ வண்டியில் அமர்ந்து காளைகளைச் சமாளி, நான் சக்கரங்களைத் தள்ளுகிறேன், வண்டி இதோ மேலே ஏறிவிடும்.
விவசாயி வண்டியில் போய் அமர்ந்தான்.
இளைஞன் சக்கரங்களை பலத்தைப் பயன்படுத்தி எடுத்தான்.
சேறு மிக அதிகமாக இருந்தது.
அவன் முட்டுவரையிலும் நிலத்தில் அழுந்திவிட்டான், ஆயினும் தைரியத்தை இழக்கவில்லை.
அவன் மீண்டும் பலத்தைப்பயன்படுத்தினான், விவசாயி காளைகளை உசுப்பினான்.
காளைகளுக்கு ஆதரவு கிடைத்தது, அவையும் கழுத்தைக்குனிந்துக்கொண்டு ஒருமுறை பலத்தைப் பிரயோகித்தன, வண்டி ஓடைக்கு மேலே வந்துவிட்டது.
விவசாயி இளைஞன் முன்பு கைகூப்பியபடி நின்றான்.
அவன் கூறினான், 'ஐயா, நீங்கள் இன்று என்னை உய்வித்தீர்கள், இல்லையென்றால் இரவுமுழுதும் இங்கேயே உட்கார்ந்திருக்க வேண்டியிருக்கும்.'
இளைஞன் சிரித்துக்கொண்டு கேட்டான், ' இப்போது நீங்கள் எனக்கு என்ன பரிசு அளிப்பீர்கள்'.
விவசாயி ஆழ்ந்த அக்கரையுடன் கூறினான், 'கடவுள் விரும்பினால் திவான் பதவி உங்களுக்கே கிடைக்கும்.'
மாதம் நிறைவு பெற்றது, தேர்தல் நாளும் வந்தது.
வேட்பாளர்கள் காலையிலிருந்தே அவரவர் விதியின் தீர்ப்பைக்கேட்க ஆர்வமோடு இருந்தனர்.
பகல் நேரத்தைக் கழிப்பது மலைபோல இருந்தது.
ஒவ்வொருவரின் முகத்திலும் நம்பிக்கை மற்றும் நிராசையின் சாயல்கள் வந்து போயின.
இன்று யாருக்கு அதிருஷ்டம் வாய்க்கப்போகிறதோ தெரியவில்லை.
மாலை நேரத்தில் அரசரின் அவை அலங்கரிக்கப்பட்டது.
நகரின் செல்வந்தர்கள், அரசு அலுவலர்கள், அரசவை உறுப்பினர்கள் மற்றும் திவான் பதவி பெற விழையும் வேட்பாளர்களின் கூட்டம் நல்ல உடைகளில் அலங்கரித்துக் கொண்டு அரசவைக்கு வந்தது.
வேட்பாளர்களின் இதயங்கள் துடித்துக்கொண்டிருந்தன.
அப்போது சர்தார் சுஜான் சிங் எழுந்து நின்று கூறினார், திவான் பதவிபெற விழையும் வேட்பாளப் பெருமக்களே, நான் உங்களுக்கு அளித்த தொல்லைக்கு என்னை மன்னியுங்கள்.
இந்தப்பதவிக்கு நெஞ்சில் கருணையும் அதோடு கூட தன்வலிமையும் கொண்ட ஒரு மனிதர் தேவையாக இருந்தது.
இந்த சமஸ்தானத்தின் புண்ணியத்தினால் நமக்கு அப்படிப்பட்ட மனிதர் கிடைத்து விட்டார்.
இத்தகைய குணவான்கள் உலகில் மிகக்குறைவு.
நான் பண்டித ஜானகீநாத் போன்ற திவானை அடைந்ததற்காக சமஸ்தானத்தை வாழ்த்துகிறேன்.
சர்தார் மீண்டும் கூறினார், தான் காயமடைந்தும்கூட ஒரு ஏழைவிவசாயியின் வண்டியைச் சேற்றிலிருந்து வெளியேற்றிக் கால்வாயின் மேலே ஏற்ற முன்வந்த நபரின் இதயத்தில் தைரியம், தன்வலிமை மற்றும் தாராள குணம் நிரம்பியிருக்கும் என்பதை ஒப்புக்கொள்ள உங்கள் அனைவருக்கும் எவ்விதத் தடங்களும் இருக்காது.
இத்தகைய மனிதர் ஏழைகளை ஒருபோதும் துன்புறுத்தமாட்டார்.
அவருடைய உறுதிப்பாடு திடமானது அது அவருடைய மனதை உறுதியாக வைத்திருக்கும்.
அவர்தான் வேண்டுமானால் ஏமாறலாமா, ஆனால் தயை மற்றும் தரும மார்க்கத்திலிருந்து ஒருபோதும் பிறழமாட்டார்.
பிரேம்சந்த்.
(முன்ஷி பிரேம்சந்த் எழுதிய மூலக்கதையின் சுருக்கித்தொகுத்த வடிவம்)
Lesson 21
குப்தா - சுந்தரம் அவர்களே, சார் செயல(பயிற்சி)ரிடமிருந்து புதிய பாடத்திட்டம் தொடர்பான கோப்பு திரும்பி வந்துவிட்டதா?
சுந்தரம் - நீங்கள் உட்காருங்கள், நான் கோப்பைப் பார்த்து விட்டுச் சொல்கிறேன்.
கணேசன் அவர்களையும் அழைக்கலாம் என்று நினைக்கிறேன்.
(அதே சமயம் கணேசன் அறையில் நுழைகிறார்)
குப்தா - வாருங்கள், கணேசன் ஜி
நான் இப்போது உங்களைஅழைக்க இருந்தேன் செயல(பயிற்சி)ரிடமிருந்து புதிய பாடத்திட்டம் தொடர்பான கோப்பு திரும்பி வந்துள்ளது.
புதிய பாடத்திட்டம் அமைப்பதற்கு முன்பு இது தொடர்பாக ஒரு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
கணேசன் கூட்டம் எப்போது நடத்தப்பட வேண்டும்.
குப்தா - இந்த மாத இறுதியில். ஏனென்றால் அடுத்த மாத முதல் வாரத்தில் சார் செயலர் அரசாங்கச் சுற்றுப் பயணத்தில் சென்னை செல்கிறார்.
சுந்தரம் - நேரம் மிகக் குறைவாக உள்ளது.
கூட்டத்துக்கு முன்னால் குழுவின் அமைப்பும் செய்யவேண்டும்.
குப்தா - ஆம், குழு அமைப்பு குறித்து, குழுவில் துறைசார்ந்த 10-12 உறுப்பினர்கள் இருக்கவேண்டும், அவர்களில் ஒவ்வொரு மண்டல இணை இயக்குநரும் சேர்க்கப்டவேண்டும் என அவர் விரும்புகிறார்.
கணேசன் - இந்தக் குழுவில் வெளியிலிருந்து சில விஷய நிபுணர்களையும் சேர்ககவேண்டும் என்பது என் யோசனை.
குப்தா - ஆம், இது சரிதான்.
அவர்களுடைய அநுபவங்களிலிருந்து நமக்கு பயன் கிடைக்கும்.
சுந்தரம் - குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 20-25 ஆகிவிடும் என்று தோன்றுகிறது.
கணேசன் - குப்தாஜி, இந்தக் கூட்டம் செயலர் அவர்களின் தலைமையிலேயே நடக்கும் அல்லவா?
நம்முடைய அலுவலகத்தில் மாநாட்டு அரங்கில் இது நடக்கமுடியாது, ஏனென்றால் அங்கு பழுது பார்க்கும் வேலை நடந்து வருகிறது, அது இம்மாதக் கடைசியில் தான் முழுமைபெறும்.
சுந்தரம் - இந்த நிலைமையில் கூட்டம் வேறொரு கூட்ட அரங்கில் நடத்த, நிர்வாக அலுவலரிடம் கலந்துரையாட வேண்டும் என்பது என் யோசனை.
குப்தா - யோசனை நன்று.
கூட்ட அரங்குக்காக இன்றே நிர்வாக அலுவலருக்குக் குறிப்பு அனுப்பவேண்டும்.
கூட்டத்துக்கு இந்த மாதம் இருபத்தைந்தாம்தேதி சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
நான் இந்தக் கோப்பை உங்களிடம் அனுப்புகிறேன்.
கூட்டத்தில் பங்குபெறும் உறுப்பினர் பட்டியலும் ஆலோசிக்க வேண்டிய விஷயங்களின் நிரலும் இன்றே தயார் செய்யவேண்டும் என்று விரும்புகிறேன், இதனால் எல்லா உறுப்பினர்களுக்கும் உரியகாலத்தில் அறிவிக்க இயலும்.
சுந்தரம் - சரி
நான் மாலைக்குள்ளாக உறுப்பினர்களின் பட்டியலையும்நிகழ்ச்சி நிரலையும் ஒப்புதலுக்காக உங்களிடம் அனுப்புகிறேன்.
குப்தா - கணேசன்ஜி, எல்லா ஏற்பாடுகளும் குறித்த காலத்தில் நடக்கும் பொருட்டு, நீங்கள் நிர்வாக அலுவலரிடம் கலந்துரையாடி இன்றே குறிப்பு எழுதிவிடவேண்டும் என்று விரும்புகிறேன்.
கணேசன் - ஐயா, நான் மாநாட்டு அரங்குக்காக இன்றே நிர்வாக அலுவலருக்குக் குறிப்பு எழுதுகிறேன்.மேலும் ஓரிரு நாட்களுக்குள் எல்லா நடவடிக்கைகளும் எடுத்துவிட்டு, விரைவிலேயே உஹ்களுக்குக் கோப்பு சமர்ப்பிப்பேன்.
குப்தா - சரி
இந்த பணிகள் எல்லாம் கூடிய விரைவில் நடக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.
கணேசன் சுந்தரமும் – சரி.
Lesson 22
சார் செயலர் : ராகவன்ஜி
நீங்களே வந்துவிட்டீர்கள், நல்லதாய்விட்டது.
நான் உங்களை அழைப்பதாக இருந்தேன்.
நேற்று துணைச் செயலர் அறையில் அனைத்துக்கிளை அலுவலர்களின் கூட்டம் நடந்தது.
ஒவ்வொரு பிாிவின் வருடாந்தர ஆய்வு விரைவில் நடக்கவேண்டும் என்றும், நிலுவைப்பணிகளை முடிக்க சிறப்பான முயற்சி எடுக்கப்படவேண்டும் என்றும் அதில் முடிவு செய்யப்பட்டது.
ஆய்வு பணி உடனே ஆரம்பிக்கபடும்.
நம்முடைய பிரிவுகளின் ஆய்வுக்கான தேதி இன்னும் நிச்சியிக்கப்படவில்லை.
அடுத்த வாரம் ஆய்வு நடக்க சாத்தியக் கூறு உள்ளது.
கடந்த ஆண்டு நடந்த ஆய்வில் தங்கள் பிரிவின் பணி நன்றாக இருந்திருக்கிறது.
இம்முறையும் உங்கள் செயல்திறன் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
ராகவன் : இதைக் குறித்துத் தான் தங்்களிடம் பேச விரும்புகிறேன்.
பிரிவில் இப்போதெல்லாம் பணியின் அளவு மிக அதிகமாகிவிட்டது என்பதை தாங்கள் அறிவீர்கள்.
வருகைக் கடிதங்களின் எண்ணிக்கை இருமடங்காகி விட்டது, ஆனால் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகவிகித்தில் அதிகரிக்கவில்லை.
இரண்டு அதிகப்படியான உதவியாளர்களின் நியமனம் பற்றிய விஷயம் தள்ளிப் போய் கொண்டேயிருக்கிறது.
சார் செயலர் : இதற்காக வருடாந்தர ஆய்வை நிறுத்துவது சாத்தியமில்லை.
நீங்கள் பிரிவு அலுவலர், நீங்கள் இதற்கான தீர்வைக் காணவேண்டும்.
ராகவன் : இந்த வாரத்தில் இரண்டு விடுமுறைகள் வருகின்றன.
அந்த இரண்டு நாள்களிலும் பணியாளர்களை வேலைக்கு அழைக்கலாம். அவர்களுக்கு மிகைநேர வேலைப்படி ஒப்பளிக்கப்படலாம்.
சார் செயலர் : ராகவன்ஜி, உங்களுக்குத் தான் அரசு கொள்கை தெரியுமே.
மிகைநேர வேலைப்படி கொடுக்கப்பட இயலாது.
ஆம், இழப்பீட்டு விடுப்பு அளிக்க இயலுமே.
ராகவன் : இதனால் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாது.
அவர்களின் விடுப்பின் போது நிலுவைப்பணி மீண்டும் அதிகமாகிவிடும்.
அதனால் அந்த தனிப்பட்ட நிலைமையில் மிகைநேர வேலைப்படி ஒப்பளிக்கவேண்டும்.
சார் செயலர் : நல்லது, சரி.
வேறு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?
ராகவன் : ஆம், நம்முடைய பிரிவில் திருமதி.சக்ஸேனா ஈட்டிய விடுப்பில் செல்ல விரும்புகிறாள்.
சார் செயலர் : அவருடைய விடுப்பை ரத்து செய்யமுடியாதா?
ஆய்வுக்குப் பிறகு அவருடைய ஈட்டிய விடுப்புக்கு ஒப்பளிப்போம்.
ராகவன் : அவரை அழைக்கலாம், ஆனால் செல்வி.தனலக்ஷ்மியின் விடுப்பை நிறுத்த இயலாது, ஏனெனில் அடுத்த மாதத் தொடக்கத்தில் அவருக்குத் திருமணம்.
அவருக்குச் சென்னை செல்லவேண்டும்.
சார் செயலர் : அவருடைய விடுப்பு ஒப்பளிக்கப்படலாம்.
ராகவன் : இன்னொரு விஷயம் தங்களுடன் பேச விரும்புகிறேன்.
எல்லா உதவியாளர்களிடமும் வேலை நிலுவையில் உள்ளது, ஆனால் கிருஷணனின் இடத்தில் நிலுவைப்பணியின் அளவு அதிகமாக இருக்கிறது.
அவருடைய வேலை சரியில்லை.
அவரால் வேலையை துரிதப்படுத்த முடிவதில்லை.
அவரால் இந்தப் பொறுப்பு நிறைவேற்ற இயலாது என்று நினைக்கிறேன்.
தாஸை இந்த இடத்தில் அமர்த்தினால் நிலுவைப்பணிகளை நிறைவு செய்யமுடியும்.
கிருஷணனை ஏதேனும் இலகுவாக இடத்தில் அமர்த்தலாம்.
சார் செயலர் : நீங்கள் எப்படி உசிதம் என நினைக்கிறீர்களோ(அப்படிச்செய்யலாம்)
நான் சார் செயலர் (நிர்வாகம்)டம் இரண்டு அதிகப்படி தற்காலிக உதவியாளர்களை கோருகிறேன்.
நீங்கள் இதுகுறித்து ஒரு தன்னிறைவான குறிப்புரை கொடுங்கள்.
ராகவன் : சரி ஐயா!
Lesson 23
திரு.பத்மசிங், உதவி இயக்குநர் மைய அரசு சுகாதார நலத்திட்ட இயக்குநர் பெயருக்கு எழுதிய முறையீடு
பெறுநர்
இயக்குநர்
மைய சுகாதாரத் திட்டம்
சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம்
புதுதில்லி
பொருள்:-தில்லியிலிருந்து மும்பைக்கு என் இடமாற்றத்தை நிறுத்தக் கோரிக்கை
ஐயா,
மேற்குறித்த பொருள் தொடர்பாக........தேதியிட்டஅலுவலக ஆணை எண்.....பார்க்க வேண்டுகிறேன்.
இந்த ஆணையின்படி துணை இயக்குநர் பதவியில் எனக்குப் பதவி உயர்வு கிடைத்துள்ளது.
பதவி உயர்வுடன் எனக்கு தில்லியிலிருந்து மும்பைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனக்கு மும்பை செல்வது சாத்தியமில்லை ஏனெனில் என்னுடைய சில குடும்பம் பிரச்சனைகள் வருமாறு
எனக்கு தில்லியில் அரசுக் குடியுருப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.
இடமாற்றத்தில் மும்பை செல்வதனால் நான் இந்த அரசுக் குடியிருப்பை காலி செய்ய வேண்டியிருக்கும்.
தில்லியில் எனக்கு சொந்த வீடு எதுவும் இல்லை.
அரசுக் குடியிருப்பை காலி செய்வதால் என்னுடைய குடும்பத்தினர்க்கு குடியிருப்பும் பிரச்சனை ஏற்படும்.
தில்லி மற்றும் மும்பை போன்ற இரண்டு பெருநகரங்களில் சொந்தமாக வீட்டுவசதி ஏற்பாடு செய்வதனால் என்னுடைய பொருளாதார சுமை அதிகரிக்கும்.
என்னுடைய மனைவி தில்லி அரசில் ஆசிரியை.
அவளுக்கு தில்லியிலிருந்து வெளியே இடமாற்றம் கிடைக்காது.
எனக்கு இரண்டு குழந்தைகள், அவர்கள் தில்லியில் தனியார் பள்ளியில் படிக்கின்றனர்.
என் மகள் பத்தாவது வகுப்பில் படிக்கிறாள் எனவே பள்ளிப்படிப்பின் நடுவில் இரண்டு குழந்தைகளுக்கும் வேறு இடத்தில் சேர்க்கை வாங்குதல் சாத்தியமில்லை.
என் வயதான பெற்றோரும் என்னுடன் வசிக்கின்றனர்.
என் தந்தையார் இதய நோயால் பீடிக்கப்பட்டுள்ளார் மேலும் தாய்க்கு கீல்வாத நோய் உள்ளது.
என் மனைவிக்கு வேலையுடன் தனியாக முழுக்குடும்பத்தையும் கவனிப்பது சாத்தியமில்லை.
மேற்கூறிய பிரச்சனைகளைச் கருத்திற்கொண்டு என் முறையீட்டை கருணையுடன் கவனித்து தில்லியிலேயே என்னை நியமனம் செய்ய வேண்டுகிறேன்.
தங்கள்
கையொப்பம்
பத்மசிங்
உதவி இயக்குநர்
இடம்....
தேதி.....
Lesson 24
இந்திய மக்கள் கருத்திக்கள் மற்றும் ஆணைகளை வெளியிடுவதற்கு, அரசு கடிதம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த கடிதங்கள் அரசின் கட்டளையின் கீழ் எழுதப்படுகின்றன என்று கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும்.
மாநில அரசுகள், மத்திய அரசு பொதுப்பணி ஆணையம் போன்ற சட்டப்படி அமைந்த நிறுவனங்கள்,தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், இணைக்கப் பெற்ற மற்றும் கீழுநிலை அலுவலங்கள்,பொதுத்துறை மற்றும் பொது மக்களிடையே கடிதப்போக்குவரத்து பயன்படுத்தப்படுகிறது.
இரண்டு அமைச்சகங்களிடையே த்தம் கடிதப்போக்குவரத்துக்குக்'கடிதம்' பயன்படுத்தப்படுவதில்லை.
கடித்தின் வரைவு தன்னளவில் நிறைவானதாக இருக்கும்.
அதற்குக் கீழ்வரும் பகுதிகள் உண்டு:-
1.கடித எண்
2.இந்திய அரசு,துறை,அணைச்சகம்/அலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி.
3. தேதி
4. பெறுநர்,பெறுநரின்் பெயர்,பதவிபெயர் மற்றும் முகவரி
5. பொருள்
6. பார்வை(இதற்குமுன் கடிதப்போக்குவரத்து நடந்திருந்தால்)
7. முகமன்(அரசு கடித்தில் ஐயா/அம்மணி மற்றும் அரசு சாராத கடித்தில் அன்புள்ள ஐயா/அம்மணி)
8. கடிதத்தின் முக்கியப்பகுதி
9. கீழ்க்குறிப்பீடு(தங்கள் நம்பிக்கைக்குரிய)
10. அனுப்பரின் கையொப்பம் மற்றும் பதவிப்பெயர்
கடிதத்தில்'ஆணையிட்டவாறு',தெரிவிப்பது','செய்க,'செய்யப்படவேண்டும்','செய்ய்ப்படுகிறது','செய்யப்படும்','செய்வதிசயம்',போன்ற வினை வடிவங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
No comments:
Post a Comment